Translate

Sunday, 30 December 2018

நெஞ்சுக்குள் நீந்தும் உன் காதல் - கவிதை

நெஞ்சுக்குள் நீந்தும்
உன் காதல் எண்ணம்
எந்நாளும் என்னை உயிர்வாழ செய்யும்!

என் கண்கள் தேடும்
உன் பிம்ப தோற்றம்
கண்டாலே போதும்
வாழ்வெல்லாம் இன்பம் வந்தே சேரும்!

என் அருகே நீயும்
இருந்தாலே போதும்
அழகான நேரம்
நாள்தோறும் தோன்றும்!

ஓ!மாயாவி...
ஓ!மாயாவி...
வித்தைகள் செய்தாய்!
விளையாட வைத்தாய்!
உன் காதல் பூக்கள்
மழையாக பெய்தாய்!

ஓ! புல்வெளி எல்லாமே பனித்துளி!
நீ நடந்தே சென்றாய்...
அவையாவும் பொன்னாய்
மாறிட வைத்தாய்!

பூவென உன் மணம்
நிறைகின்ற நேரம்
மானுட வேட்கை
மறைந்தே தான் போகும்!

மறையாத நிலா!
நீ என்றே உலா!
என்றென்றும் விழா
நீ இங்கே பலா!
ஆகாகா! ஆனந்தம்...
நெஞ்செல்லாம் பேரின்பம்
உன்னாலே உண்டானதே!

Saturday, 29 December 2018

தாய்மை - கவிதை

#தாய்மை!


ஓ! என் மகவே!
மனம் நிறைந்த உன் தந்தை
என் மடி நிரப்பினார்
பேரன்பு புதையலாய் உன்னை!

நீ கருவாய் உருவான நிமிடம்
ஈடில்லா இன்பத்தின் எல்லைகள்
கடந்து வந்தேன்!
என்னுயிரில் உன்னுயிரை
தாங்கும் பொழுதெல்லாம்
மண் மீது நடந்ததில்லை நான்!
மகிழ் வானில் அன்றோ பறந்தேன்!

தாய்மை பதவி தந்த
தனிப்பெரும் கருணையடா நீ!
புளிப்பு மாங்காய் தேடின
சுவை மொட்டுக்கள்!
எனக்கான பசி கடந்து
உனக்கான உணவுகள் உண்டேன்!

அடி வயிற்றில் கரம் வைத்தே
மெல்லிறகாய் வருடினேன்
நீ உலவும் உணர்வை பெற!
ஒரு புறமாய் படுத்தே
உன் உயிர் காத்தேன்!

உதைக்கும் உன் கால்கள்
தடம் காட்டும் நேரமெல்லாம்
கண் வியந்தே ரசித்தேன்!
எப்போதும் உன் தந்தையின்
கரம் கோர்த்தே இருக்க
ஏங்கிய நாட்களெல்லாம்
பெருந்துணை நீயடா!

அன்று...
கோடி மின்னல்கள் தாக்கியதாய்
தோன்றி மறையும் வலி வந்தே
எனை துடிக்கச் செய்தது!
மரணத்தின் வாசல் வரை
சென்று...சென்று..திரும்பி வந்தது- உயிர்!

யாரென்ற தெரியாத நபர்கள்...
நிர்வாணமாய் நான்!
இருண்டு போகும் கண்களின்
கடைசி காட்சி...உன் தந்தையையே
தேடி நின்றது!

இடுப்பு எலும்புகள்
சடக்கென்று உடைவதாய் உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே இருக்க
கண்கள் மூடி....கரங்கள் மடித்து
வலிகள் கடந்தும் வேண்டிக்கொண்டேன்
இறைவனை...!

குவ்வா... குவ்வா... என்றே
அழுகை சத்தம்!
முதலாய் உன் அழுகை கண்டு
அகமகிழ்ந்து ஆனந்தம் கொண்டேனடா!

அத்தனை வலிகளும்
கண்ணீரென கரைந்து ஓடிட
தொப்புள் கொடி உறவே
நெஞ்சோடு அனைத்தேன் உன்னை!

மார் நிறைந்து
மனம் நிரம்பி வழியும் அமுதென அன்னையின் உயிர்த்துளி
தாய்ப்பாலாய் நீ அருந்திட
தாய்மையின் புனிதம் அடைந்தேன்
ஆருயிரே... என் அன்பு மகவே!
கோடி முத்தங்களடா...என் பெருநகையே!

#இளையபாரதி

Thursday, 27 December 2018

சில்லுக்கருப்பட்டியே பாடல்

சில்லுக்கருப்பட்டியே
செல்ல முயல்குட்டியே!
கண்ணு வச்சுட்டியே
கட்டி இழுத்துட்டியே
மொத்த உலகத்தையும்
உன்ன சுத்த வச்சுட்டியே!

காதல் தீய பத்தவச்சுட்டு
கரண்ட்டுபோல சுண்டி இழுக்குற
சும்மா என்ன ரவுசடிக்கிற
Cooling bear ஆ கலந்தடிக்குற

காத்தாடியா உன்ன வட்டமடிக்கிறேன்டி
பூஞ்சாடியா நீ மினுமினுக்கிறடி!
மின்னல் போல கண்ணு அடிக்கிற
ஜன்னல் காத்தா குளிரடிக்கிற
சில்லுத்தண்ணியா நெஞ்சுகுளிரவே
சில்லுக்கருப்பட்டியா உள்ள இனிக்கிற!

நெஞ்சு குழியில என்ன பதுக்குற
பெஞ்ச மழையில தள்ளி நனைக்கிற
ஐயோ... ராணியே...அழகு தேவியே
ஆள மொத்தமா  காலி பண்ணிப்புட்ட
தாலி கட்ட சொல்லி...
என்ன புருஷனாக்கிட்ட

இந்த ஜென்மம் போதுமாடிப்பெண்ணே
இன்னும் வேணும் காதல் பண்ணிடவே
சில்லுக்கருப்பட்டியே...
செல்ல முயல் குட்டியே

நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு
நித்தம் இன்பம் கொட்டிவச்சேன்
கட்டித்தங்கம் வாங்கி வந்து
உன்ன செலைய செஞ்சுவச்சேன்!

கல்லூரியின் மடியில் - அவளின் நான்

கல்லூரியின் மடியில்
நான் பிறந்திட்ட போது
நான் பேசிய முதல்பெண் அவள்!
தயக்கம் தானாகவே வந்திருந்தது!
அதுவரை என்னிடம்!

வாய் திறந்து கேட்டேன்
முதலாய் “பெயரை!”
இதழ் மலர்ந்து புன்னகைத்தாள்
பெயர் கூறி!
எட்டிய திசையில்
எழுமுனை நட்சத்திரமாய் “அவள் முகம்”!

கணிப்பொறியின் அறையில்
கவனமாய்ப்பேசின வார்த்தைகள்
அவளுடன் ஆவலுடன்!
உடன் கவிதையும் சிந்தினேன்
காந்தமாய் ஈர்த்துக்கொண்டாள்!

அதனால் தானோ அரும்புவிட்டன
எம் படைப்புகள் சிந்தையில்!
கவிதை பூத்த சிந்தை
காய்ந்தே இருந்தது
முள்மந்தையாய் அதுவரை!

கல்லூரியும் வகுப்பறையும்
வாய்விட்டுக்கேட்டன கவிதைகளை!
அதில் மழலை பிழை இருக்கலாம்!
தாயாய் ஏற்றனர் நண்பர்கள்!

அதனால்தான் சொல்கிறேன்!
அவள் எனக்குப்பிடித்தவள் என்று!
இவ்விடத்தில் காதல் இல்லை!
காலம் தீண்டும் நட்பு மட்டுமே !
ஆராதிக்கப்படுகிறது அவளுடன்!
அவள் என்றுமே எனக்குப்பிடித்தவள்!

மெழுகு செலையா உருகி வழியும் பாடல்

மெழுகு செலையா உருகி வழியும்
உன் அழகை அள்ளி
பூசிக்கிற ஆசை கொல்லுதடி...!
சிரிக்கும் நிலவா...
நீ சிதறி எறியும் சிரிப்பை எல்லாம்...
பொறுக்கி எடுத்து சேத்துக்கிறேன்டி...!

மூங்கில்பூவா அழகை நிரப்பிவச்சு
புல்லாங்குழலா பேசும்
அந்த பேச்சை ரசிச்சே பார்ப்பேன்!
செல்ல முறைப்பில்...
ஓரம் ஒதுங்கும்...ஒத்தக்கண்ணு பார்வை
எப்போ என்ன சேர்வை
என்றே கேட்டுத்தாக்கும்!

அடியாத்தி...
உன் அழகு மொத்தம் பாத்தேன்
என்னை மறந்தே வியந்துபோனேன்
வயசான பிறகும்...
காதல் நிரம்பி வழியும்
முழுசான அன்பை
மனசு கொட்டித்தீர்க்கும்...

நீ வந்தா...
என் நிழலுகூட பேசும்...
பூப்பந்தா...
மனசு பறந்தே போகும்...
அடியாத்தி...
அசர வைக்கிற நீயே...
மனதில் சந்தன தீயே...
பத்திக்கிச்சே...
காதல் ஒட்டிக்கிச்சே...

Tuesday, 25 December 2018

மழை பெஞ்சா மனசெல்லாம் - பாடல்

இசையின் இணைதலுக்கு
காத்திருக்கும் மெலடி!

மழை பெஞ்சா மனசெல்லாம்
நனையாம குளிரும்!
நீ வந்தா உசுரெல்லாம்
உற்சாகம் பிறக்கும்!
அடியே அழகு களவானியே
கண்ணில் கனவெல்லாம்
வந்தாய் நீயே!

நிஜமாக நீதானே வந்தாய் பெண்ணே
நினைவெல்லாம் சுகமாக
நின்றாய் கண்ணே!
ஒரு நூறு ஜென்மம்
எடுத்தாலும் உன்னை
வரமாக கேட்பேன்
வாயாடிப்பெண்ணே !

அலைமோதும் கடல் தாண்டி
இருந்தாலும் உன்னை
அன்பாலே அடைகின்ற
திமிர் தானே என்னை
உந்தன் அருகே இணை சேர்க்கும்!

இல்லாத உலகங்கள்
இருந்தாலும் அங்கே
உன்னோடு நான் சென்று
வருவேனே பெண்ணே!

பனிதூவும் நிலமெல்லாம்
அனில் போல உன்னை
சுமந்தேதான் சுற்றி
வருவேனே பெண்ணே!

குளிர்க்காத்து வீசும் பொழுதெல்லாம்
எந்தன் மூச்சுக்காற்றாலே
உனக்கு இதம் என்றும் தருவேன்!
பதமான சொல்லெல்லாம் பூமாலையாக்கி
பொன்னான பெண்ணே
உனக்கென்று தருவேன்
கவிதை நிலவே!

#காதல்_மெலடி

Saturday, 22 December 2018

கலவி கவிதை

கலவி கவிதையாக மட்டும்!

கால் கொலுசின் பெரும் புன்னகை காதோரம் இசைக்கட்டும் என்றே
உளவுகிறேன் உன்னோடு!
ஒவ்வொரு இரவும் கலவியின்
களைப்பு மறந்தே
களிகொள்கிறது-மனது!

ஆடைகள் தொலைந்த இரவில்
ஆரவாரம் அதிகம் தான்
மகிழ்வின் மழலை
பிறக்கும் வழி என்றே
பிழை இன்றி கரைகிறது இரவின் நிலவு!

இடைவெளி ஏதுமில்லா
கட்டியணைப்பில் கலவரம் ஏதுமில்லை!
காதோரம் கிசுகிசுக்கும்
உன் முந்தானை சத்தம்
மூங்கில் இசையாய் அறை நிரம்புகிறது!

தீர்ந்து போகும் இரவிலும்
தீராத காதல் கலவி கொண்டே
கட்டில் நிரம்புகிறது!
மனங்களின் சங்கமத்தில்
மடை திறக்கிறான் காமன்!

உடைகளின் விடுதலை
உணர்வுகளின் கைவிலங்கை உடைத்து
உறவின் நீட்சிக்கு உன்னதம் சேர்க்கிறது!
பொங்கும் பெருவெள்ளம்
புதையல் கொணர்ந்தே கடல் நிரம்புகிறது!

கடித்தே முத்தமிட்ட குழந்தைத்தனத்தில்
உன் குறும்புகள் ஏராளம்
ஆனாலும் நீ தந்த அன்பும் தாராளம்!

நம்பிக்கை பயணம் கவிதை

கனவெல்லாம் நிஜமென்று
நடக்கும் நாள் எதுவோ!?
உழைப்பெல்லாம் பயனாக
கிடைக்கும் நாள் எதுவோ!?

உறங்காமல் விழித்தேதான்
இருக்கும் இலக்குகளே
உனை அடைந்தே தான்
தீரும் எந்தன் கனவுகளே!

கண்ணீரே கரைந்தாலும்
காயம் ஆரவில்லை!
செல்லும் பாதையெல்லாம்
முள்ளென்றாலும் பயணம் முடிவதில்லை!

தீராத பெரும்தாகம் கொண்டேதான்
நாட்கள் நடக்கிறதே!
ஓயாத உழைப்பேதான்
எந்தன் முதலீடே!

காயங்கள் பட்டாலும்
களைப்பென்றே வந்தாலும்
கால்கள் ஓய்வதில்லை!
பெரும் ஆழத்தில் புதைத்தாலும்
விதைகள் சாவதில்லை!

மீண்டும் மீண்டும் மோதிடும்
துணிவே என்றும் துணையாகும்!
துயரென்று வந்தாலும்
பயம் என்று ஏதுமில்லை!

வேரோடு சாய்ந்தாலும்
மரங்கள் சாவதில்லை!
சோர்வென்று அறியாத
தாழ்வென்று நினையாத
நம்பிக்கை தோற்பதில்லை!

இதோ இதோ என் வெற்றி!
அது எட்டும் தூரத்திலே!
இதோ இதோ என் வெற்றி!

#போராடு

Tuesday, 18 December 2018

தென்றலே! உன்னை தேடிப்பார்க்கிறேன்!

தென்றலே! உன்னை தேடிப்பார்க்கிறேன்
மோதியே நீ ஓடிப்போகிறாய்!
பூக்களே உம்மை நுகர்ந்து பார்க்கிறேன்
வாசமாய் நீ காற்றில் கறைகிறாய்!

மின்னலே!
உன்னைப்பிடிக்க நினைக்கிறேன்!
ஒரு நொடியிலேன் உடைந்து போகிறாய்!
மேகமே உன்னில் நடக்க துடிக்கிறேன்
நகர்ந்து நீ மறைந்து போகிறாய்!

மூங்கிலே உன்னை இசைக்க துடிக்கிறேன்!
இருந்தும் ஏன் நீ துளைகள் மறைக்கிறாய்!
ஆடையே உன்னை அணிய நினைக்கிறேன்!
இருந்தும் ஏன் நீ பறந்து செல்கிறாய்!

தாரரா.... தாரத்தாரரா...
தாரரா....தரத் தாரத்தாரரா...

வானிலே வந்த வெண்ணிலா
நாளுமே நீ எந்தன் கண்ணிலா...
மோகமே..என்றும் பெண்ணிலா!?
என்றுதான்..தீரும் என்றுதான்...
ஏங்கியே.. நானும் நடக்கிறேன்!
தீயென...இந்த பாதை கடக்கிறேன்!

பெண்மையை உன்னை
காணத்துடிக்கிறேன்!
கண்களில் ஏன் மறைந்து கொள்கிறாய்!?
நெஞ்சிலே உன்னை அணைக்க நினைக்கிறேன்
பஞ்சென ஏன் பறந்து செல்கிறாய்!?

வாணி.. வா... வா.. நீ...வா
பார்க்கலாம்...பேசலாம்...பழகலாம்...
பூக்களை தந்துதான்
கரங்கள் கோர்க்கலாம்!
வாணி.. வா... வா.. நீ...வா

Saturday, 15 December 2018

உள்ளுக்குள்ள பேராசை...கவிதை

உள்ளுக்குள்ள பேராசை
உன்னைக்கண்டு நான் பேச
என்ன சொல்லி கூப்பிடட்டும்
பூவா பொறந்த பேரழகை

பஞ்சாரத்து கோழி போல
என்ன பொத்தி வச்ச நீயே
இன்னும் உன்னை பாத்திடவே
உள்ளம் இருக்கு பெருந்தவமே!

அன்பை பொழியும் புதுமழையே
ஆவாரம்பூ முகத்தழகே

காதோரமா கதை சொல்லம்மா...கவிதை

காதோரமா கதை சொல்லம்மா
நீயாகவே எனை சேரம்மா
தானாகத்தான் வரும் காதலை
பேரின்பமாய் ஏற்போமே
என்னாளுமே உயிராகவே
இனி வாழ்வோமே!

உயிரே...உயிரின் உறவே...
இரவே..இரவின்...பனியே
பகல் போலவே ஒரு சூரியன்
இரவெல்லாமே இருந்தாலென்ன
நீயாகிய மறு நிலவினை
நான் கொண்டேனடி!

அழகே...அழகின் மொழியே
விழியே...விழியின் வழியே
உனை சேர்ந்திடும்
என் பிம்பத்தின்
உயிர் ஆகிய பெரும் தவமே!

கனவே கனவில் தோன்றும் உலகே
உன்னோடுதான் நான் வாழ்ந்திட
என்னோடுதான் நீ சேர்ந்திட
ஆகாககா ஆனந்தமே!
ஆயுள் எல்லாம் பூ வாசமே
வந்ததே தென்றலே நீயாகிறாய்!

#இளையபாரதி

ஓ! புதிய புயல் ஒன்று கெளம்பியே! கவிதை

ஓ! புதிய புயல் ஒன்று கெளம்பியே
கரை கடந்திட துடிக்குதே
பெரும் மழை வந்து அடித்துதான்
மரம் செடியெல்லாம் சாய்க்குதே!

ஆனாலும்...
இந்தச்சாலை ஓரம்
நடக்கும் பூ இவள்
ஒரு புன்னகையால்
புயலை கடக்கிறாள்!

ஒரு மெல்லிசை இடியென இசைக்கிறாள்!
ஹே! இது என்ன மாயம்!?
இவள் செய்யும் மாயம்!?
ஹோ! இவள் சக்திகள் கொண்ட தேவதையா!
இல்லை சாட்சிகள் அற்ற கற்பனையா!

ஓ! காதல் கொண்டேன்...
அவள் கண்ணில் கண்டேன்...
என்னை விழுங்கிடும் பேரழகி...
உன்னில் புதைகிறேன்
மெல்ல எழுகிறேன்...

இன்னும் புரியலையே...
வந்த புயல் வந்த எங்கே!
இந்தப்பயல் நெஞ்சில்
ஓ! புதுக்காத்து அடிக்குதே!

பேராண்மையை நீ கொண்டவா! கவிதை

பேராண்மையை நீ கொண்டவா!
தீராப்புகழ் தான் வெல்ல வா!
தோள் உயர்த்தியே சினம் காட்டி வா!
கண் அசைவிலே படை திரட்டி
பகை முடித்திடும் திரன் கொண்டு வா!

திசை எங்குமே புகழ் ஒலித்திட
பெரும் அன்பினை பறை சாற்றி வா!
பரண் ஏறியே திறன் காட்டிடும்
மறம் கொண்டே தான்
சிரம் நிமிர்த்திடும் பெருந்தகையே!

வா!..வா!..

வாள் சுழற்றிடும் களம் இறங்கியே
பகை அறுத்திடும் வீரா
வெற்றி வெற்றியாய்
குவித்து வைக்கும் நேரமே இது
எழுந்து வா!

#வீரம்

அவளுக்கு...மழை என்றே பெயர்...! கவிதை

அவளுக்கு...மழை என்றே பெயர்...!
பெரும் கடலின் துளித்துளி
பிம்பம் அவள்!
மின்னலை கட்டிக்கொண்ட
மேகத்தின் மகள் அவள்!

இடியென கோபமாய் கொந்தளிக்கும்
கணவனின் கண்ணீர்த்துளி அவள்!
காற்றை காதல் கொண்டே
மரங்களின் மோகம் கொண்டவள்!

தாகம் தீர்க்கும்
தடாகங்களை பிரசவிக்கும்
தாயுமானவள்...தயை செய்பவள்!

இரவு பகலுக்கும்
சிற்றுயுர் பேருயிருக்கும்
மேடு பள்ளத்துக்கும்
பேதங்கள் காட்டிடா
பெரும் கருணை அவள்!

மலை சிகரத்தில் விழுந்து
அடி நகரத்தில் நதியாய் நடந்து
கடலாய் கரைந்து போகிறாள்!

இதில் எத்தனை கவிஞனின்
கரங்களுக்கு கவிதையாகிறாள்!??
எத்தனை உயிர்களின்
உயிர்ப்பாய் இருக்கிறாள்!

ஓ! பெருமழை என்றே
வந்துவிட்டாள் இப்போதும் இங்கே!
வாடி! ராசாத்தி!

#இளையபாரதி

பேட்டராஜா பாடல்

#Rajiniyisam

எதிரி கூட்டமெல்லாம்
ஒன்னா கெளம்பி வந்தா
இவனை எதிர்த்து நின்னா
அடிச்சு நொறுக்கிடுவான்
சல்லி சல்லியா
புயலா கெளம்பிடுவான்
தள்ளி நில்லையா!
Single லாவே கெத்து காட்டும்
சிங்கம் இவன் தான்...

ராஜா...ரா..ரா ராஜா
பேட்ட...ராஜா
Scene u விழுமே Single அ நடந்தா
Danu ரகம் டா இது காளியோட களம்டா
திமிரா கெளம்பி வர்றான்
திருப்பி கொடுக்க வர்றான்

விழுற அடியில அடக்கி ஆள வர்றான்
பேட்ட .. ராஜா
கெத்தா கெளம்பி வர்றான்
சேட்டையெல்லாம் காட்ட வர்றான்...
பேட்ட .. ராஜா
Pulse U எகிற...உனக்கு படபடக்கும் heartu
Scene அ stepவச்சு
single ஆ சிங்கம் வர்றான்
பதறி...நீயும் செதறி
கொஞ்சம் அலறி... ஓடு...

நாட்டை எல்லாம் அதிரவைக்கும்
பேட்ட ராஜா கெளம்பி வர்றான்...தீயா!
தீரா கோபம் கொண்டு
திமிரா நடந்து வர்றான்...
வாடா..எதிர வாடா...
தில்லிருந்தா எதிர்த்து வாடா...

தெறிக்கும் பாரு Mass u
தலைவன் தாண்டா Boss u
எதிரி எல்லாம் piece...u
Eyes அ பாரு sharp u

அன்பாலே அடக்கலாம் இவனை
வம்பா நீ வந்தாலே சவமே...
ராஜா..பேட்ட ராஜா...
கெளம்பி வந்தா
Sound u எகிறும்... Bulb u செதரும்
ஊரே அலறும்...ராஜா..பேட்ட ராஜா..

ஆகா... அந்த தேவதை - பாடல்

ஆகா... அந்த தேவதை
ஏனோ ஒரு பூமழை
தானா இங்க பொழியுறா
தேனா பேசி சிரிக்கிறா!
உள்ளுக்குள்ள பத்திக்கிச்சு நெருப்பு
உன்னாலே பொழுதாச்சு சிறப்பு!

கண்ணால சிரிக்கிறா...
கன்னம் காட்டி கவுக்குறா
முன்னால நடந்துதான்
தன்னாலே தாக்குறா...
அய்யய்யோ... ஆகிப்போச்சு சேதாரம்...
ஆனாலும்... அவ எனக்கு ஆதாரம்....

என்னமா..அழகுடா...
மொத்தமா...நிலவுடா...
சத்தமா கத்தியே...
காதலை சொல்லவா...

ஒத்தையா... பூ தந்து...
உன் முன்னால் நிக்கவா...
சொல்லுடி....சுவீட்டு corn u
கொடைக்கானல் புள்ளி மானு...
லவ்வுல விழுந்துட்டேனே...
உம்மேலே..தானே நானும்...
ஓகே..வா...
உன்னை நான் ..
மொத்தமா அள்ளவா..

Are you ready Baby...
I am you your Darby...

Saturday, 10 November 2018

இலவசம்... ஒரு அலசல்

இலவசம்...

இதிஒரு புரிதல் இல்லா நிலையே அதிகம் காணப்படுகிறது.
எந்த பொருட்கள் இலவசமாக தரப்படுவதை நாம் ஏற்க வேண்டும், எதிர்க்க வேண்டும் என்பதில் ஒரு ஆழ்ந்த புரிதல் வேண்டும்.
வெறும் தேர்தல் வெற்றிக்காக, தேர்தலுக்கு முன் சொந்த பணத்தில் இலவச பொருட்கள், பணம் தந்த நிலை இருந்தது...இருக்கிறது.

அதன் அடுத்த படியாக அரசு பணத்திலேயே இலவச பொருட்களை தந்து வாக்குகள் பெரும் உக்தியாகவே தேர்தல் அறிக்கையில் டிவி, மிக்சி, கிரைண்டர், பேன் போன்ற பொருட்களின் இலவச விநியோக அறிவிப்பு உள்ளது.

உண்மையில் இலவசம் தருவது மக்களின் வாழ்க்கை மேம்பாடு, வளர்ச்சிக்கு உதவுமா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. மேலும் அந்த பொருட்களின் தரம், பயன்படும் காலம் ஆகியன கேள்விக்குரியதாகவே உள்ளது.

அவ்வாறு இதுவரை கொடுக்கப்பட்டதில் என்ன வாழ்வியல் முன்னேற்றம், மேம்பாடு அடைந்துள்ளது.
உண்மையில் அரிசி, பருப்பு போன்ற ரேஷன் பொருட்கள் இலவசமாகவோ, மானிய விலையிலோ தரப்படுவது அவசியம். ஏனெனில் அவற்றை நம்பியே வாழும் குடும்பங்கள் உள்ளன. ஆனால் அதையும் எவ்வளவு காலம் தர வேண்டும் என்பதில் ஒரு கருத்தாக்கம் வேண்டும்.

ஒருவன் வாழும் காலம் முழுவதும் இலவசமே தந்து வாழவைத்தல் என்பது மிக மோசமானது. அவனும் அதையே நம்பி வாழ்வதும் மோசமானதே.
தற்காலிக தேவைக்கு மட்டும் கொடுக்கப்பட்டு..பின்னர் அவை யாவற்றையும் சொந்த உழைப்பில் வாங்கும் வகையிலானா வேலை வாய்ப்பையும், சரியான ஊதியத்தையும் கொடுப்பதே ஆகச்சிறந்தது.

ஆனாலும், இவை யாவற்றையும் தாண்டி... அனைத்து தரப்பும் கேட்கும் இலவசம் என்று உள்ளது. அது...கல்வி, மருத்துவம், தண்ணீர், சுகாதார சூழல். இவை ஏன் இலவசமாக அனைத்து குடி மக்களுக்கும் தரப்பட வேண்டும் எனில்... இவை வெறும் சேவை என்பதை தாண்டி அனைவருக்கும் அத்தியாவசியம்.
மேலும் இவை வணிக பயன்பாடாக இருக்க கூடாது. 

ஏனெனில்... வணிகமாக மாறும் பொழுது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தரமான வகையில் இவற்றை பெரும் சூழல் ஏற்படும். மேலும் அவர்களும், மற்றோரும் வணிக லாபத்திற்காக மருத்துவம் போன்றவற்றில்... செயற்கையான நோய்கள் உருவாக்கம், இயற்கைக்கு முரணான கட்டாயப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை வழி பிரசவம் போன்றவற்றால் பாதிக்கப்படும் நிகழ்கால சூழலும் உள்ளது.

எனவே தான்... ஏழை, பணக்காரன் வித்தியாசம் இன்றி தரமான கல்வி, மருத்துவம், தண்ணீர், சுகாதாரம் ஆகியன இலவசமாக கொடுக்கப்பட வேண்டும்.

இலவசத்தை எதிர்ப்பதற்காக இன்று கூக்குரல் இடும் அரசியல் கட்சிகள்... இது மாதிரியான இலவசம் வழங்குமா என்றால் இல்லை. உதாரணம்... பெரும்பாலும் தனியார் மயமாகிப்போன இந்த சேவைகள் தான். மேலும் கேன் குடிநீர், கோவை சிறுவாணி தண்ணீர் ஆகியன தனியார் மயமாக்கப்பட்டத்தில் இந்த அரசியல் கட்சிகள் பங்கு மிகப்பெரியது.

கவர்ச்சி பொருட்களை இலவசமாக வழங்க கட்சிகள் காட்டும் ஆர்வம் கல்வி முதலான சேவை வழங்குவதில் இல்லை.
இதுவே அவர்கள்...மிக்சி, கிரைண்டர், டிவி முதலான இலவசத்தை வாக்கு வாங்கும் கருவியாகவும், ஊழல் செய்யும் வாய்ப்பாகவும்...கல்வி முதலானவற்றை தனியார் மயமாக்கி கமிஷன் பெரும் வழியாகவும் வைத்துள்ளனர் என்பதே நிதர்சனம்.

#இளையபாரதி

Friday, 2 November 2018

அடைமழை ஒன்னு குடைக்குள்ள பெஞ்சு - பாடல்

அடைமழை ஒன்னு
குடைக்குள்ள பெஞ்சு
மனசையும் நனைச்சுச்சாம்...
ஒரு இடி வந்து
திடுப்பென விழுந்து
உசிரையும் மிரட்டுச்சாம்...

அப்போ...
நீயும் வந்துட்ட...
என்னை...
சரியா புரிஞ்சிட்ட...
இப்போ சிரிக்க வச்சிட்ட...

சேலை...தலைப்பையும் நீட்டித்தான்
சோலை பூவென மணந்த்திட்ட
மெல்ல சிரிப்பை கொடுத்துத்தான்
என்ன வெலைக்கு வாங்கிட்ட...

அந்த மாலை
மயங்கும் நேரத்தில்
கண்ணுல அம்பை விட்டுட்ட...

அடி செவப்பு சேலை
செதைக்குது என்னை
காதலா நெஞ்சில்
புதைக்குது உன்னை...
ஐயோ...
என்ன இது புரியலை...
என்னை பிடிக்கவே முடியல...
சொல்லு..
நான் என்ன செய்யட்டும்...?

உன்ன பார்த்த பரவசம்
உடம்புல தெம்பா பரவட்டும்...
ஒத்த வார்த்தை பேசித்தான்
காதல் மாற்றம் நடக்கட்டும்...
மிச்சம் இருக்க வைத்துத்தான்
முத்தங்கள் மழை என பொழியட்டும்..

ஆஹா...
அது ஒரு ஆனந்தம்...
ஆடடா...
அது...இனி ஆரம்பம்...

#இளையபாரதி
#புதிய_காதல்

Tuesday, 30 October 2018

English -U Song-U

I just wanna know that something baby...!
Am I.?am I.? your sweet heart-O!?
Ur Love beat-O!?
Let me know... let me know...
that love beauty! Hey You Sweety!

All my days U are my... dream scene-U!
Single-U Heart Full ah...Love Wine-U!
when You are... There in street
Eyes Full ah Green Scene-U!

Hey Naughty...U beauty
Love Party Let's Do that-U!
Hey Sweety...Honey Tasty...
When you Come closer
Fire Sparks comes out-U!

Hey...Hey..hey..
Your Eveys-U that is very nice-U!
That Smiling libs-U
Always Sweet Box-U

#Song_Under_Composing
#Englishu_poetu

Sunday, 21 October 2018

சுதந்திரம்... உரிமை...!


சுதந்திரம்... உரிமை...!

அது யாருக்கும் கொடுக்கப்படவேண்டும். ஆனால் அதை மிக சரியாக பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அது மிகப்பெரிய கேள்விகளையும், நிரந்தர தடையையும் எதிர்கொள்ள நேரிடும்.

அப்படியாகத்தான் நான் தாழ்த்தப்பட்டோர் பாதுகாப்பது தொடர்பான சட்டம்,பெண் உரிமை, பெண் சுதந்திரத்தை பார்க்கிறேன். வரதட்சணை தடை சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. மிக கொடுமையான பாதிப்புகளை தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருந்த வரதட்சணை கொடுமை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 
ஆனால் அதற்கு பின்னர், அதை தவறான வழியில் பயன்படுத்தி , தவறு செய்யாத ஆண்களையும் தண்டிக்க செய்தனர்.

அது போலவே, இப்போது சபரிமலை விவகாரம். பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. ஆனால், அந்த உரிமையை வெற்று விளம்பரத்திற்கும், போலி புரட்சிக்கும் பயன்படுத்தும் போது... உண்மையிலேயே பக்தியோடு,சரியான விரத முறைகளை கடைபிடித்து கோவிலுக்கு வர எண்ணும் பெண்களுக்கான உரிமையும் கேள்விக்குரியதாக மாறிவிடுகிறது.

ஆடை சுதந்திரம், பாலியல் சமத்துவம், வேலைவாய்ப்பு, சம்பள சமவிகிதம் என்பன போன்ற பெண் உரிமைகள் விவாதத்திற்கு இடமின்றி பெண்களுக்கும் சம அளவு, பங்கீடு இருக்கிறது.

ஆனால், வெறும் வர்த்தக ரீதியான காட்சி பொருளாக பொது வெளியிலும், தொலைக்காட்சி, சினிமா ஊடகங்களிலும் பெண்களின் ஆடை சுதந்தரம் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

அது போலவே...#METOO வையும் நாம் பார்க்க வேண்டும். யாருமே மறுக்க முடியாத வண்ணம், பாலியல் சீண்டல்கள், வற்புறுத்தல்கள் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

அப்படி உண்மையாக வெளிப்படுத்தும் நபர்களுக்கான பேராபத்தாக ஆண்களைவிட,
போலியாக பழி வாங்கும்  அல்லது பழி சொல்லும் வகையில் பயன்படுத்தும் நபர்கள் தான் என்பதை உணரவேண்டும்.

அதுவே...
உண்மையான சம உரிமை, சுதந்திரத்தை பெற்றுத்தரும். மேலும் பெண்களுக்கான வாய்ப்பை பெண்களே தவறாக பயன்படுத்துவதை...முழு மூச்சாக பெண்கள்தான் முதலில் எதிர்க்க வேண்டும். அதுவே, சமத்துவம் பேசும் அனைவருக்குமான பாதுகாப்பாக இருக்கும்.

#பெண்உரிமை
#சபரிமலை
#MEETO
#தவறான_பயன்பாடு

Tuesday, 16 October 2018

இரவிலே சூரியன் உறவினை சேரும் - கவிதை

இரவிலே சூரியன் உறவினை சேரும்
வரும் பகலிலே வெறுமையில் கோபங்கள் வெயிலென உமிழும்!

நிலவது விளக்கினை ஏற்றியே செல்லும்
குளுமையை தந்துதான்
உறவின் வெக்கை போக்கும்!

சூரியன் சுடுமென
பூக்களின் மேலே
பனித்துளி சேர்வதாய்
உதடுகள் தேன்துளி நனைத்துதான்
காதலை பேசும்!

அருவியென விழுந்திடும்
தண்ணீர் யாவும்
தபாங்கள் தீர்க்கவே
பூமியில் பாயும்!

புதுஉயிர் பிறந்திடும் பொழுதெல்லாம்
புன்னகை தேசத்தில்
மகுடங்கள் பூக்களை சூடும்!

அந்தியில் வானமும்
மஞ்சளை பூசியே
மங்கலம் சேர்க்கும்!

மீண்டும் வரும் நாட்களும்
இதையே சுழற்றும்!
தேடி தேன்பருகின
காதலின் ஜீவன்கள்!

கண் சிமிட்டி புன்னகைப்போம்
நாளுமே நாமும்!

#இளையபாரதி

Sunday, 14 October 2018

வைரமுத்து-சின்மயி விவகாரம்

வைரமுத்து-சின்மயி விவகாரம்.

சிறந்த தீர்வு...

இனி வரும் காலங்களில் ,
எந்த மாதிரியான பாலியல் சீண்டல்களையும் உடனுக்குடன் எதிர்கொண்டு, ....
இனி எப்போதும், எவருக்கும் நடக்காமல் இருக்க சூழல் அமைத்து கொடுப்போம்.

பாதிக்கப்படுபவர்...
வெளிப்படையாக பேச வாய்ப்பு தந்து கேட்பதற்கு செவிதிறந்து காத்திருப்போம்.

இது நாள் வரை நடந்ததை வெளிப்படுத்தும் வாய்ப்பும் இருக்கவே செய்கிறது. ஆனால், அது எந்தவித குற்றம் இழைக்காத யாரோ ஒரு நபரையும் வஞ்சத்தோடு... பழி தீர்க்கும் வாய்ப்பாகவும் அமைந்துவிடும் எனும் அச்சமும் இருக்கிறது.

உண்மையாகவே... தவறு செய்தவருக்கான தண்டனை என்ன என்பதை வரையறுக்க இயலா சூழல் இருக்கிறது எனும் எதார்த்தமும் நம்மை சூழ்கிறது.

விருப்பமின்றி கட்டாயத்திற்கு உள்ளானவரும்,
வாய்ப்பு கிடைத்தால் சரி என்று "இடம்" அளித்தவரும், இப்படியான சூழலை எதிர்கொண்டும் தவறிழைக்காதவரும் இருக்கின்றனர்.

அவர்கள், தங்களின் சுய நடத்தையை அப்பழுக்கற்ற முறையில், கேள்விகளுக்கு இடமின்று பரிசோதிக்கட்டும். மேலும், தத்தமது
தனிப்பட்ட விருப்பத்தின் படியே #METOO ல் கருத்து தெரிவிக்கட்டும்.

ஆனால், அது தவறு செய்தவர்கள் மட்டுமே வெளிப்படுவதை உறுதி செய்யட்டும். மேலும், அதிலே, இன்னார் செய்தால் கடந்து செல்வது... இன்னார் செய்தால் மட்டுமே ஊளையிடுவது எனும் பாகுபாடு இருக்குமாயின்... நிச்சயம் தவரிழைத்தவரினும் மோசமான குற்றவாளி, குற்றம் சுமத்துபவரே ஆகும்.

மேலும் எந்த ஒரு மூன்றாம் நபரும், தங்களின் தனிப்பட்ட வெறுப்பு, விரோதத்தை தீர்த்துக்கொள்ளும் இடமாக, வாய்ப்பாக இல்லாது இருத்தலுமே உண்மையான வழிமுறையாகும்.

திட்டமிட்டே தவறிழைத்தவரும்,
முயன்று பார்ப்போம் என்று "இடம்" பெற்றவரும் இல்லாத வருங்காலத்தை உருவாக்கலாம்.

#முயன்று_பார்ப்போம்

பசி என்னும் மரணம்!


பசி தரும் மரணங்கள்!

எங்கே போகிறோம் நாம்!???

நான் வழக்கமான பாதையைவிட்டு புதிதாய் சில தினங்களில் தான் மற்றொரு பாதையில் நடக்க ஆரம்பித்தேன்!. அங்கே, தாயின் பேரன்பில், இயற்கையின் மர நிழலில் 7 நாய்க்குட்டிகள் அங்கும்...இங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருந்தன.

புதிதாய் பிறந்த சிற்றுயிர்கள் தான். ஒன்று பால் குடித்தும், மற்றொன்று படுத்துக்கொண்டும் இருந்தன. இன்ன பிறகுட்டிகள் அந்த சாலையின் இரு புறங்களுக்கும் தூது சென்று கொண்டிருந்தன.

தாய்மையின் களிப்பை உணர இயலாத களைப்பில், அந்த தாய் நாய் இருந்தது.
ஆம்... அரை வயிறு நிரம்பவே உணவு கிடைக்காத நேரத்திலும்,அடி வயிறு பால் சுரக்க வேண்டுமல்லவா.!?

அடுத்த நாள்... அதே பாதை.... அதே காட்சி. ஆனால் சிறு மாற்றம். அத்தனை குட்டிகளும் படுத்தே இருந்தன. உற்று பார்த்த போது...மூச்சு விடவும் வலிமை இன்றி... நிலத்திற்கு கண்ணீர் தானம் செய்திருந்தன .

எலும்புகள் பசியின் கொடுமையை வெளிக்காட்டிக்கொண்டு இருந்தன. தாய் மட்டுமல்ல குட்டிகளின் உடம்பிலும் தான்.

எளிதாய் கடந்து சென்றாலும்.... ஏனோ...? என் மனம் அங்கேயே சுழல தொடங்கியது.
"மனிதர்களுக்கு மட்டுமே' என தண்ணீரும், உணவும் படைக்கப்பட்டதாய்
நவீன கால விதிகள் சர்வாதிகாரம் செய்யபட்ட நாடு அல்லவா இது.
அந்த விதிகளின் விளையாட்டு என் மன கேள்விகளுக்கு இட ஒதுக்கீடு செய்திருந்தது.

அதனாலேயே... அலுவலகம் வந்த பின்னும் பேசிக்கொண்டு இருந்தேன்... அந்த உயிர்களுக்கு எங்கு இருந்து உணவு கிடைக்கும் என்று.
நிச்சயம், அவை பெரிய பசிக்கொடுமையில் வாடித்தான் படுத்திருக்க வேண்டும்.

நான் மறுநாள் நிச்சயம் அவைகளுக்கும் உணவு எடுத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனபோதும்,
இறைவன் அவர்களுக்கு இன்றைக்கான உணவின் வழியை காட்டிவிட வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டேன்.

அடுத்தநாள், எழுந்திருக்கும் பொழுதே அவைகளுக்கான உணவு செய்ய வேண்டும் எனும் மகிழ்வோடே எழுந்தேன். சமையல் முடித்து, எனக்கும், அவற்றிற்கும் தனித்தனி டிபன் பாக்ஸில் உணவு எடுத்துக்கொண்டு வந்தேன்.

அவை இருக்கும் இடம் வந்ததும் ஒரு சிறு பதற்றம். அங்கே, அந்த நாய் கூட்டத்தை காணவில்லை. திடீரென தாய் நாய், குட்டியின் அருகில் பறந்த, ஒரு காக்கையை விரட்டி சென்றது.
ஆகா... தாய்மையின் சிறப்பல்லவா... என்று வியப்பை உணரும் நேரத்தில் ஒரு பேரதிர்ச்சி. நேற்று, கண்ணீரோடு பசியில் வாடிய குட்டி.... இன்று மரணித்து இருந்தது.

அந்த நொடி, ஒட்டு மொத்த மனித இனத்திற்க்கான குற்றஉணர்ச்சியும் என்னை தாக்கியது. தாய் நாய் சோகமே உருவாக... இறந்த குட்டியின் அருகில் காக்கைகள் வராமல் பார்த்துக்கொண்டு இருந்தது.

மற்ற குட்டிகள்... நாளை வந்துவிடும் நமது மரணமும்... இப்படித்தானே நம்மை கிடத்தி இருக்கும் எனும் சோகத்தில் அதை நாக்கால் தடவி விட்டபடி சுற்றி நின்றன.

உடைந்த மனதோடு... நான் கொண்டு வந்த டிபன் பாக்ஸை திறந்து உணவை கொட்டி வைத்து... அவற்றை அழைத்தேன். உணவைத்தேடி...ஒன்றும் வருவதாய் இல்லை.

சில நொடிகள் சிலை என ஆகிப்போனேன்.  அப்போது... தாய் நாய் மட்டும் வந்து உணவை முகர்ந்து பார்த்தது. சரி... இப்போதாவது உணவை திங்கும் என்று எண்ணினேன். அவற்றின் மொழியால், குட்டிகளை அழைத்தது. தான் உண்பது போன்று தோரணை செய்தது, குட்டிகளாவது உண்ணட்டும் என்று.

அவை... என்ன... மனிதர்களா!????
யாருமே...ஒரு சிறு பருக்கையையும் உண்ணாமல் விலகி சென்றன. ஒரு கேள்வியோடு... !
இந்த சோற்றை நேற்றே தந்திருந்தால்... ஒரு உயிர் போயிருக்குமா!???

#குற்றவாளி
#நேற்று_நான்
#இன்று_நீ
#நாளை_நாம்

மற்ற உயிர்களுக்கு என்றும் ஒரு கை அரிசி சமைப்போம்!

"உலகம் மனிதர்களால் ஆனதுமில்லை.
மனிதர்களுக்கு மட்டும் ஆனதுமில்லை."
#இளையபாரதி

Tuesday, 9 October 2018

வாழ்க்கை எதுவென்று - பாடம்!

வாழ்க்கை எதுவென்று
தேடல் நாம் கொண்டு
தேடி செல்கையிலே

இன்பம் வரும் துன்பம் வரும்
உயர்வு வரும் தாழ்வு வரும்
காதல் வரும் பிரிவு வரும்
நட்பும் வரும் பகையும் வரும்

நடுங்கிடாதே துயர் கண்டு!
ஒடுங்கிடாதே பகை கண்டு!
வெகுண்டு எழு சினம் கொண்டு!

தோல்விகளை தோள் தட்டு
முயற்சி எனும் முதல் கொட்டு
வெற்றி எனும் முரசு கொட்டு!

உனக்கென்றும்... எனக்கென்றும்...
நமக்கென்றும் வாழ்வுண்டு!
வாழ்ந்திடுவோம் மகிழ் கொண்டு!

வா! வா! எழுந்து வா!
என் தோழா எழுந்து வா!

#நம்பிக்கை
#இளையபாரதி

ஒரு கதை சொல்லட்டா காதலி!

ஒரு கதை சொல்லட்டா காதலி!

கல்லூரியில் நாம் சேர்ந்திட இரண்டாம் நாள். சாலையின் ஒரு பக்கத்தில் நீயும் , மறுபக்கத்தில் நானும் நடந்து சென்றோம்.

ஒரு சேட்டை காற்று சுழன்று அடித்தது. வழிப்பறி செய்ததுபோல உன் துப்பட்டாவை தூக்கிவந்து, என் முகத்தில்
முத்தமிட செய்வதாக முகம் முழுவதும் நிரப்பி வைத்தது.

பதறியவளாய் ஓடி வந்து, கன்னங்களில் குழிவிழும் சிறு புன்னகையோடு கை நீட்டினாய். நான் உன் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டு, துப்பட்டாவை நீட்டினேன்.

உன் கன்னக்குழிகளில் விழுந்த நான்,
நீ சென்ற சில நிமிடங்களில்
எழுந்தபோது என் இதயத்தில்
காதல் நிரம்பி இருந்தது.

தொடரும்....

பாடல்-ஓ இந்த மாலை!

ஓ! இந்த மாலை...பெண்ணே!
நீ வந்த வேலை
என் நரம்புகள் நடமாடுதே!
ஹே!...நளினத்தில் குயில் பாடுதே!

சிக்கிக்கொண்ட காற்றில்
சில்வண்டு சிறகாடுதே!
சில நேரம் பூக்கள்...
தனனன தலையாட்டுதே!

உயிரோடு மெல்ல
உன் சுவாசம் செல்ல
உடல் இங்கு பனியாகுதே!

பறப்பற பட்டாம்பூச்சி
தொடுத்தொடு தொட்டுப்போக
ஒட்டிக்கொண்ட வண்ணங்களை
ஒத்திக்கொண்ட கண்ணங்களே
என் முத்தங்களை வாங்குங்களே!

ஒருவொரு வெள்ளைப்பூவை
தினம்தினம் காதல் கொண்டு
தேடிச்சென்ற தேன்வண்டுகள்
தேகம் எங்கும் பூ முத்தங்கள்!

கண்டுவிட்ட நானும்
வந்துவிட்டேன் தேடி
எங்கே என் பங்குகள்
மிச்சம் இன்றி தாருங்களே!
தவனைகள் இல்லை
அதில் தவறுகள் இல்லை!

நெடுவயல் யாவும்
நிரம்பிய பச்சை
விழிகளில் விருந்தானதே!

மழை கொஞ்சம் வேண்டும்
மயில் கொஞ்சம் வேண்டும்
இசை இங்கு வேண்டும்
இன்பத்தில் நாம் ஆடலாம்!
இயற்கையை பண் பாடலாம்!

பெண்ணே!
என்ன தயக்கம்
நீ வந்துவிட்டால் தொடங்கும்
பேரின்ப பெரும்பண்டிகை!

#இளையபாரதி

பெட்ரோலிய_காதல்!

கச்சாஎண்ணெய் விலைபோல
என்காதல் உம்மேலே
ஏறிக்கிட்டே போக
பெட்ரோல் விலைபோல
பாசம் உந்தன்மேல
நாளும் கூடுதே!

ஆனா என்ன செய்ய
அரசாங்கம் போல
இத கண்டுக்காம நீ போற!

ஐயோ மனசு இங்க
மக்கள் போல
மாட்டிக்கிட்டு தவிக்குதே!

#பெட்ரோலிய_காதல்

ஓ! காக்கை குருவிகளே

ஓ! காக்கை குருவிகளே!
உம் சிறகை தாருங்களே!
இந்த பொழுதுகள் நெடுந்தூரம்
என்னை கூட்டி சென்றிடுமே!

இன்றைய சென்னை trafic இல்
வண்டிகள் செல்ல வழி எங்கே!?
செல்லும் வண்டிகள் குடித்துவிட்ட
பெட்ரோல் பொருளின் விலை என்ன?

எண்ணெய் விற்கும் கடையினில்
என்னை விற்றாலும் பத்திடுமா?
பாதை கடந்து சென்றிடவே
உந்தன் சிறகை தாருங்களே!

#இளையபாரதி

அந்திமாலை

சட்டென நீயும்
கண்கள் சிமிட்ட
தொட்டதே வானம்
போதும் போதும்!

உன் கன்னங்கள் மோதும்
காற்றை பிடித்து
சிறையில் அடைக்க
தோன்றும் தோன்றும்!

செவ்விதழ் ஓரம்
பூக்கும் சிரிப்"பூ" எல்லாம்
என்னையே வந்து சேரும் சேரும்!

மாயம் செய்யும் மாலைப்பொழுதில்
மேற்கே சூரியன் மஞ்சள் குளிக்கும்
நீர்துளி ஒன்று உன்னை சேர்ந்து
பொன்னிறமாக முகத்தில் மிளிரும்!

அந்த சிலநொடி...
நான் சிக்கித்தவிப்பேன் பாரடி - நீ
வரும்வழி யாவும் இங்கே
வாசனை பரவும் நுகரடி!

நுனிப்புல் ஆடும் பனித்துளி மேலே
உன் பிம்பம் விழுந்து அதிசயம் ஆகும்!
இந்த காட்சிகள்
காதலை பருகச்சொல்லி
மது கோப்பையில்
மனதை மூழ்க வைக்கும்!

#காதலன்
#அந்திமாலை
#அவளுடன்_நான்

#இளையபாரதி

முதல் காதல் #1999





இப்பொழுதுதான் மலர்ந்த மலரென
எப்போதும் வசீகரிக்கும் பேரழகு அவள்!
இரட்டைசடை பிண்ணி
இரண்டுக்கும் இணைப்புவிழா நடத்திய கனகாம்பரம் சூடி
வெள்ளை முகத்தில்
மஞ்சள் நாட்டியம் செய்து
புதுப்பொழிவோடே புன்னகைப்பாள்!

நானும் அவளும்
ஒரே வகுப்புதான் பள்ளியில்!
அவளுடன் ஆவலுடன்
பேசும் வாய்ப்புகளை
தேடிக்கொண்டே இருக்கும் மனது!

மதிய உணவிற்கு வீடு செல்வாள்!
பின் சென்றே பழகியது என் கால்கள்!
அவள் திரும்பும் நேரமெல்லாம்
பற்களின் எண்ணிக்கையை
காட்டி விடுவேன்!(சிரிப்பு)

ஒரு கண் மட்டும்
சிமிட்டும் முயற்சியில்
சேர்ந்து கொள்ளும்
மற்றொரு கண்ணும்!
இரண்டு கண்களையும் சிமிட்டி
அம்பு விடும் ஆர்வம்!

எப்போது தான் என்னை பார்ப்பாள்!??
என்ற கேள்வியால் எப்போதுமே
பார்த்திருப்பேன் அவளை!
அப்பப்போ பார்த்தும் விடுவாள்!
அப்பப்பா பட்டாம்பூச்சிகள்
சிறகு விரித்துவிடும்
என் சிறு இதயத்தில்!

சொக்கட்டான் கல்லும்,
நொண்டி ஆட்டமும்
மாலைநேர தரிசனத்தை
காண செய்துடும்!
இரவிலும் கனவில்
முகம் காட்டிவிடுவாள்!

அது காதல் என்ற இலக்கணத்தில்
சேர்ந்திடாத ஈர்ப்பு!
#Love என்ற வார்த்தையாக மட்டுமே
வாழும் ஒரு பேரானந்தம்!

ஒரு மாலை...
ஊர் நடுவே அடிகுழாய்!
பாட்டி..  ஒரு சிறுகுடம் தண்ணீர்
கொண்டுவர சொல்லியும்
மறுத்து ஓடியவன்!

அவள் அடிகுழாயில் நின்றதை பார்த்தபின்,
3 குடம் தண்ணீருக்கே
நிரம்பிய தொட்டியில்
10 குடத்திற்கும் மேல்
ஊற்றிக்கொண்டு இருந்தேன்-அவளால்!

ஒவ்வொரு நாட்களையும்
உன்னதமாக மாற்றிக்கொண்டு இருந்தால் பள்ளி பருவத்தில்!
இப்போதெல்லாம்...
திருவிழா நாட்களில் காண்கிறேன்-அவளை!
இடுப்பில் ஒன்று, அருகில் ஒன்று என
குழந்தைகளோடு!

முதல் காதல்
இதயத்தில் இப்போதும்
இனிமைதந்தே வாழ்கிறது
யாவருக்கும்!

#இளையபாரதி

Sunday, 7 October 2018

புரட்சி

தீயென எழுகவே
தீமைகள் ஒழிக்கவே
புதியதோர் இளைஞனே
தீயென எழுகவே!

மலர்களை அழித்து இங்கு
மணங்களை தேடினோம்!
பிணங்கள் என்று எண்ணியே
நமை பேய்களும் ஆளுதே!

உணர்வின்றி ஒதுங்கியே
வாழும் என் தோழனே
தீயென எழுகவே
தீமைகள் ஒழிக்கவே!

கருத்தியல் புரட்சியே
காலங்கள் வென்றுடும்!
ஒருத்தனும் அரசியல்
பிழைப்பென்று வாழுதல் இல்லா

நாளினை நாமே படைத்திட
பெரும்படையென எழுகவே
புதியதோர் இளைஞனே!
தீயென எழுகவே
தீமைகள் ஒழிக்கவே!

#இளையபாரதி

வீட்டுக்குள்ள காத்து வர fan அ நம்பாத

வீட்டுக்குள்ள காத்து வர fan அ நம்பாத
வெளியபோயி மரத்த வைக்க
சோம்பல் படாத
எதிர்காலம் இருட்டாகி போக கூடாது
யாருக்கும் தண்ணி இல்லா
நெலைமை கூடாது!

மழைதான் பெய்யுங்காலம்
விதைபந்த போட்டா!
வளர்ந்து மரம் நிக்கும்
பச்சை பந்தல் காடா!

எழுந்து வெளிய வாடா
ஏரி குளம் வெட்ட!
மண்ணுல பொன் வெளையும்
பனைய நீயும் நட்டா!

பச்சை பசுங்காடு
எல்லாம் எங்க தேடு?
மலையை murder பண்ணி
செலைய வச்ச நாடு - குடி
தண்ணிக்கு அள்ளாடுது!
குடிச்ச தண்ணியிலும் தள்ளாடுது!

ஊரெல்லாம் செங்கல்காடு
வளத்து வச்ச நாம
காத்துக்கும், தண்ணிக்கும்
காசை கொட்டுறோம்!

இனிமே இயற்கையோட
சேர்ந்து வாழ நாம
வழிதான் செய்யவேணும்!
காடும் மலையும்
கடவுளா வணங்க வேணும்!

ஒத்த நொடியில ஓர விழியில- பாடல்

ஒத்த நொடியில ஓர விழியில
கட்டி இழுத்துட்டுப்போறபுள்ள
மொத்தசனம் நின்னு...
கண்ணு விரிச்சுப்பாக்குதடி

காத்திலாடும் தாவணி
முகத்தில் மோத  யாவும் நீ
ஆகிப்போன தேவியே
மடி சாயவா? மனம் நிறையவா!?

போதும் போதும் என்றுதான்
அன்பை கொட்டும் தேவதை
கருப்பு முகத்தில் ஒற்றையாய்
சிவந்து நிற்கும் பொட்டென
உன்னை நானும் சேர்கிறேன்!

உன்னை என்னில் தேடியே
கடந்து போகும் நாட்களில்
என்னை உன்னில் மறைக்கிறேன்
உலகம் வியக்க எழுகிறேன்!

விழுந்து விழுந்து எழுந்துதான்
உந்தன் மடி சாய்கிறேன்!
இன்று பிறந்த குழந்தையாய்
உந்தன் அன்பில் நனைகிறேன்!

மரங்கள் தோறும்
பறந்து திரியும்
சின்னச்சின்னக் குருவிகள்
சிறகு விரிக்கும் அழகினை
நீயும் நானும் காண்கிறோம்!

திறந்த வானம் பறந்துதான்
காதல்  கீதம் பாடினோம்
உலர்ந்தமேகம் சென்றுதான்
ஒன்று என்று ஆகிறோம்!

#இளையபாரதி

மழை தரும் மாலையே!

மழைதரும் மாலையே
தூரலாய் பூக்கிறாய்!
சாரலில் நனைக்கிறாய்!
சாலையின் பள்ளங்கள்
இல்லமாய் சேர்கிறாய்!

குடையின் உள்ளேயும்
உறவென வருகிறாய்!
மரங்களை நனைத்தும் நீ
துளிகளாய் உதிர்கிறாய்!

சென்னையில் வெள்ளம்வரும்
எனும் புரளிகள் எழுதியே
புழுக்கம் தருகிறாய்!

ரயிலின் ஜன்னல் வழியே
என்பயணத்தில் உடன்வந்து
உடல் முழுதும் நனைக்கிறாய்!

அலுவல் நாட்களில்
பேருந்துகள் குடை கேட்கின்றன
ஊழல் ஓட்டைவழி
உள்ளேயும் ஒழுகுவதால்!

சாலைப்பள்ளங்கள்
மழைநீரோடு உயிரும்
குடிக்கும் ஆவலில்
அரசியல் வியாதிகளால்!

சாக்கடைகள் வெளிநடப்பு செய்கின்றன
சாலைகள் அரவணைக்கும் தைரியத்தில்!
இத்தனையும் பார்த்துவிட்டே
புதைகிறாய் மண்ணில்
மழையே இன்று நீ எம் மண்ணில்!

சின்னப்பொன்னு சித்திரக்கண்ணு - பாடல்

சின்னப்பொன்னு சித்திரக்கண்ணு
சுத்துறா என்னை காத்தாடியா..
மூச்சுமுட்ட பேசிசிரிக்கிறா-செல்ல வாயாடியா

யாரு யாரு யாரிவ
அழகின் அழகு தேவதை
பூவா பூத்த பூமக
புன்னகை ராணி தானிவ

செவ்விதழ் மேனி தேன்மகள்
செல்லச்சேட்டை செய்பவள்
மின்னல் கண்ணில் சாய்ப்பவள்
மிரட்டும் அன்பை தருபவள்

ஹே...களவானியே கதை பேசியே
காதல் தீய வச்ச நீயே!
கண்ணில கலாட்டா
செய்யுற வெளையாட்டா

(சின்னப்பொன்னு)

வம்பில தெம்பா வளைக்கிறா
நெஞ்சுல அம்பா தாக்குறா
ரெட்டை ஜடை வீசுறா
அட்டை படமா அசத்துறா
ஆள முழுசா கவுக்குறா!

Thursday, 27 September 2018

தேடித்தேடி...உன்னைத்தேடி

தேடித்தேடி...உன்னைத்தேடி
வயசில் பாதி...கொறைஞ்சு போச்சு
மனசுபூராம் கோடிக்கோடி...
பாரமாச்சு

எனக்கின்னு பொறந்த தேவதையே
பொசுக்குன்னு வந்தா தேவலையே
வயசுதான் ஆச்சு தெரியலையா
உனக்கு என் காதல் புரியலையா!
கல்யாணம் பண்ண நீ வரியா!

எனக்கின்னு....

அழகியே உன்ன பாக்கனுன்டி
உன்கிட்ட காதல் சொல்லனுன்டி
உங்கப்பாமா சம்மதம் வாங்கித்தான் கல்யாணம் நாம பண்ணனுன்டி

தேடித்தேடி...உன்னைத்தேடி
வயசில் பாதி...கொறைஞ்சு போச்சு
மனசுபூராம் கோடிக்கோடி...
பாரமாச்சு

Facebook உ twitter உ எல்லாமே
Account உ open பண்ணிருக்கேன்
singleஉ status போட்டுத்தான்
Waiting ல் நானோ காத்திருக்கேன்

ஸ்டைலாக Dp வைச்சுத்தான்
போட்டோவ Post u பண்ணிருக்கேன்
Likes அ நீ போட்டுத்தான்
Love அ share பண்ணு
Comment இல் காதல் ட்விட் பண்ணு

எனக்கின்னு பொறந்த தேவதையே
பொசுக்குன்னு வந்தா தேவலையே
வயசுதான் ஆச்சு தெரியலையா
உனக்கு என் காதல் புரியலையா!
கல்யாணம் பண்ண நீ வரியா!

உனக்கு என்ன பிடிக்கும் சொன்னாலும்
அதற்கு நான் தலையை ஆட்டிடுவேன்
Morningu coffie போட்டுத்தான் Bed டுல நானே கொடுத்திடுவேன்
உனக்கின்னு என்னில் சரிபாதி
எந்நாளும் தானா கொடுத்திடுவேன்!

சிம்மக்காரன் ,சிம்டாங்காரன்

#சிம்மக்காரன் - சிங்கம் போன்றவன்.

எனது வரிகள் சர்க்கார் பட #சிம்டாங்காரன் பாடல் ராகத்திற்கு!

1 to  27 வினாடிகள்!

எறங்கி அடிச்சி செதற விடுற கெத்தே
விரலை சொழட்டி scene காட்டுற வில்லே
பதர வெச்சி பஞ்சர் ஆக்குற கிங்கே

ஏ சிங்கிலு சிங்கம்மா
சும்மா சீறி நிக்கணுமா
அல்லு கெளப்பிதான்
சும்மா அசர வைக்கணுமா
சில்லு தெரிக்கத்தான்
உன்ன செதரடிக்கனுமா
தில்லு வச்சிருந்தா
வந்து எதிர்ல நிக்கனுண்டா

30 to 38 வினாடிகள்!

சிம்மக்காரன் சீறும் வீரன்
நின்னு பாரேன்
மட்ட பண்ண போறேன்

ஓ...ஓ...ஓ...

55 to 1.02 வினாடிகள்!

சிம்மக்காரன் scene னு காட்ட போறேன்
Party ஒன்னு போடேன்
ஆட்டம் காட்ட வாறேன்

ஓ..ஓ..ஓ..

1.11 to 1.42 வினாடிகள்!

எறங்கி அடிச்சி செதற விடுற கெத்தே
விரலை சொழட்டி scene காட்டுற வில்லே
பதர வெச்சி பஞ்சர் ஆக்குற கிங்கே

ஏ சிங்கிலு சிங்கம்மா
சும்மா சீறி நிக்கணுமா
அல்லு கெளப்பிதான்
சும்மா அசர வைக்கணுமா
சில்லு தெரிக்கத்தான்
உன்ன செதரடிக்கனுமா
தில்லு வச்சிருந்தா
வந்து எதிர்ல நிக்கனுண்டா

எங்க ஆளு
எறங்கிட்டான் ஹே தா...தா..வா கெத்தா!

ஓ...ஓ..ஓ....

1.47 to 2.01 வினாடிகள்!

நன்நாளானே வா.. வா..வா
இதழ்_ஒத்தடம் தா...தா...தா
மகிழ்ந்தது மனமோ...
மலரிதழ் சுகமோ...

ஹொ... ஹொ... ஹோ...

2.17 to 2.29 வினாடிகள்!

ஏ சிங்கிலு சிங்கம்மா
சும்மா சீறி நிக்கணுமா
அல்லு கெளப்பிதான்
சும்மா அசர வைக்கணுமா
சில்லு தெரிக்கத்தானே
நின்னு செதரடிக்கிறானே!

3.21 to 3.44 வினாடிகள்!

மக்களுங்க மக்காளுங்க
மக்களுங்க மனசில்
Heart க்குள்ள கலர் அடிச்ச கபீலு!

நம்ம இஷ்டாருக்கா சேட்டையில
நல்லா ருக்கும் ராட்டையில
சுத்தி னிக்கும் வேளையில டுமிலு!

உசுரு சிலுக்கும் உசுரு சிலுக்கும்
மக்களுங்க மக்காளுங்க
மக்களுங்க சுத்தி ஆடு!

ஓ...ஓ...ஓ..

3.52 to 4.23 வினாடிகள்!

சொல்ட்டி சுத்துற வெரலு
காட்டனும் மாயம்!
Girlu கூட்டமும்
சொழல மிளிரும் கெத்தே!
உசுரு கலங்கி
அதிர மரணம் விழுது!

ஏ சிங்கிலு சிங்கம்மா
சும்மா சீறி நிக்கணுமா
அல்லு கெளப்பிதான்
சும்மா அசர வைக்கணுமா
ஏ சிங்கிலு சிங்கம்மா
சும்மா சீறி நிக்கணுமா
அல்லு கெளப்பிதான்
சும்மா அசர வைக்கணுமா

அப்பரு ஏறிக்கின்னா
தா...இந்தா...கெத்தா!

ஓ...ஓ...ஓ...

#இளையபாரதி

Wednesday, 12 September 2018

காதல் melody

மெது..மெது..மெதுவாக
உயிரினில் செல்லும் காதல்
பல..பல..பல நாளா
பதுங்கி இருந்து
போட்டு தாக்கும்... காதல் beat-u...
heart-u fulla கெரங்க வைக்கும்
மனசுக்குள்ள...
உன்ன மறைச்சு வைக்கும்!

இன்னும் இன்னும் ரொம்ப
பூத்து குலுங்கும்
புன்னகையாலே பேச வைக்கும்!

ஐயோ...மெழுகு செலையா
வளர்ந்து நிக்கும்...அழகு நிலவோ...
ஆசை மனச பறக்க வைக்கும்
காதல் கிளியோ...
யாரு கண்டா... உன்ன பாத்தா
கடவுள் கூட காதல் சொல்வான்!

கட்டி தங்கம் கொட்டி செஞ்ச
தங்க செலையா நடந்து வர்றா...
என்னை கடந்து காதல் கலந்து
போறா...போறா...

இறகு மொளைச்ச பறவை போல
மனச இங்க பறக்கும் பாரு...
உன்னை தொரத்தி
காதல் சொல்ல வந்தேன் கேளு!

#Love_Song
#love_Melody
#இளையபாரதி

Monday, 27 August 2018

மகிழ்ந்திருப்போம்_மனிதனாக!

இன்பம் எனும் சூழல்
இல்லாது வாழும் மக்கா...
துன்ப விளக்கில்
விட்டில் பூச்சியாய்
விழுந்து சாக துணியாதே!

அணியாக வரும் நகைச்
சுவைகண்டு சுதந்திரப்படுத்து-உன்
துன்பச்சிறை மாட்டிய மனப்பறவையை!

இயற்கை
மடியென விரித்து வைத்திருக்கும்
பசுமை காட்சிகளில்
கண் பார்வைவிழ சுற்றி வாருங்கள்
மலை தேசங்களை!

நீண்டு கிடக்கும் நீலக்கடல்தனில்
ஓடம் இட்டு ஊர்ந்துசெல்லுங்கள்!
ஒய்வுநேரம் வரும்போதெல்லாம்
ஓடிக்களைத்த உடம்பை
நீர்தனில் நீந்த செய்யுங்கள்!

செவிகளில்
வரிகளை இசை எனும்
இன்பத்தேனில் நனைத்த
இளையராஜா பாடல்களை
பாயச்செய்யுங்கள்!

இதயம் எப்போதும் பூத்து குலுங்கும்
அன்பெனும் மலர்த்தோட்டதை
அனைவர்க்கும் திறந்து காட்டுங்கள்!

வலிகள் தந்துபோகும்
வார்த்தை பூச்சிகளை
ஒருபோதும் வாழவிடாது
உவகை தரும் சொற்களை
சுழற்றி வீசுங்கள்!

உறவு சுகம் பெறும்
மனமும் மகிழ் பெரும்
இன்பம் நிறைந்திருக்கட்டும்...
மகிழ்ந்திருப்போம்_மனிதனாக!

#இளையபாரதி

Friday, 24 August 2018

என் காதலி!

உன்னைத்தேடி தொலைகிறேன்
கண்ணில் பார்வை மறைக்கிறேன்
என்னில் எங்கோ இருக்கிறாய்
இதயம் கூற கேட்கிறேன்!

நித்தம் பிறக்கும் குழந்தையாய்
நாளும் உனக்கென பிறக்கிறேன்!
ஓடிக் களைத்த பொழுதெல்லாம் - உன்
அன்பை அமுதென பருகினேன்!

யாரை கேட்டு சொல்வதோ?
இந்த உலகம் நமக்கென பிறந்ததை!
இன்னும் தூரம் செல்கையில்
காதல் ஜுரம் கூடுமே!

நெருப்பை விழுங்கிய பொழுதென
நீ இல்லா நொடிகள் தவிக்கிறேன்!
கருப்பை வளரும் குழந்தையாய்
நீ இருக்கும் தருணம் மகிழ்கிறேன்!

அன்பை விதைக்கும் நிலமென
உன் இதயம் இருக்க காண்கிறேன்!
உண்மை பேசும் உதடுகள்
காதல் சுவை தர பருகினேன்!

கண்மை பூசிய காதலி உன்
விழிகளில் விழுந்ததை அறிவாயா!?
பெண்மை புனிதம் சேர்க்கும் உன்
பிறப்பின் ரகசியம் அறிவாயா!?

உனக்கென உவமை சொல்லிட
பூமியில் யாரும் பிறக்கல!
அந்த உவகை கொண்ட உயிரென
உந்தன் காதல் அடைகிறேன்!

என்னில் எத்தனை மாற்றங்கள்
அத்தனையும் செய்தவள் நீ தானே!
உன்னில் பிறக்கும் என் குழந்தையும்
நெஞ்சில் வார்க்கும் இன்பத்தேன்தானே!

#இளையபாரதி

Wednesday, 22 August 2018

நாம் தமிழர்!

எங்கே விழுந்தோம்...
அங்கே எழுவோம்...
திங்கள் திசையை
திருப்பிட துணிந்தோம்!
எங்கள் பகையை
நறுக்கிட முனைந்தோம்!

மறத்தமிழச்சி கொங்கை
பால் குடித்த
வேங்கை இனம் ஒன்று
எழுந்திடல் கண்டு
வீசும் பகை காற்றும்
விலகியே ஓடும்!

நஞ்சை நிலமென்னும்
தரணியைஆண்ட
தஞ்சை சோழ
இனம் என எழுந்தே
நெடுங்காவிரியை
கொணர்ந்தே வருவோம்!

புயலென கிளம்பி _வரும்
புலிப்படை கண்ணில்
தனலென எரியும்_பெருந்தீ
எரித்தே முடிக்கும்
எதிரியின் பிணத்தை!

தடையென எதையும்
நினையா மனமே அதை
உடை என முழங்கி
உறுமுதல் கேளீர்!

இனியும்,
ஏளனம் கொண்டு
மதி சூழ்ச்சிகள் செய்யின்
இவன் படை எழுந்தே
உனை எதிர்த்தே வெல்லும்!

அஞ்சி நடுங்கிடு...
அலறி துடித்திடு...
ஒரு போதும் எனை
எதிர்க்க மறந்திடு!

#நாம்_தமிழர்

காவேரி!

செத்தே தொலைகிறாள் 
நெடுங்காவேரி-நீங்கள்
விற்றே தீர்த்த பெரும் மணலால்!

அங்கே,
கன்னட கொடும் மண்ணில் 
அடைத்தே வைத்த 
பெருங்கோடுமை தாளாது

அவள் அழுது புலம்ப
வந்த கண்ணீரும்
புயல் மழையாய் அணை நிரம்ப

நீண்ட நெடும்பாதை தான்கொண்ட காவேரி
கரை நிரம்பி வருகிறாள்
அன்னைத்தமிழ் மடிதேடி!

ஆனந்த பெருநுரையாய் ஆர்ப்பறிக்க
அழகுமகள் வருகிறாள்...!

அள்ளி அணைத்து 
அணைதனில்  தேக்கி 
நிலமகளோடு நீந்தி விளையாட 
ஒரு அணை உண்டோ அரச படுபாவியே!

அவள்...
அழுது புழம்பியே 
கடல்கலப்பதால் தானோ...?
உப்பாய்போனதோ
பெருங்கடல்!

#காவேரி

ஒத்த சடை போட்ட புள்ளை

ஒத்த சடை போட்ட புள்ளை
செத்துட்டேண்டி
கண்ட பின்னே!
மொத்த சனம் ஊருக்குள்ள
ஓ அழக கண்ட பின்னே
திக்கு தெரியாம அட
விக்கி நிக்கும் பாரு!

கண்ணா பின்னா பேரழகி
கண்டேனடி
ஓ அழக...

காந்த கண்ணும் அழகு...
மூக்கும் முழியும் அழகு...
தங்க கண்ணம் அழகு...
ரோஜா இதழ் அழகு...

சங்கு கழுத்து அழகு...
முத்துப்பாசி அழகு...
மொத்தத்தில எல்லாமே...பேரழகு!

உன் மனச தொறந்து தாடி
என் உசுரு வச்சு போறேன்!
அந்த கண்ணை தொறந்து வாடி
நான் காதல் சொல்ல போறேன்!

ஒட்டு மொத்த நாட்டுக்குள்ள
உன்னைப்போல யாருமில்லை
ஒலக அழகி யாரு...
கண்ணாடிய பாரு!

#பாட்டுச்சத்தம்

பிறந்தநாள் வாழ்த்து! அகிலன்!

# போட்டு include செய்யப்பட்டவனே!
நீ என்றும் எங்களின் stdio!
Void ஆக main-ல் enter ஆவாய்!

நண்பனாய்
இங்கே DECLARE செய்யப்பட்டாய்!
ஆண் எனும் DATATYPE-ஓடு!

பிறந்தநாள் FUNCTION-ல் ENTER ஆகி
அங்கே
If வைத்து CHECK செய்யப்படுகிறது
உன் பிறந்த தேதி கண்டிசனாய் !

இன்று மட்டும் CONDITION TRUE ஆக
Printf-ல் வெடிக்கிறது
“HAPPY BIRTHDAY “ என்று !
அதனாலே ELSE இல்லை!

FOR LOOP ஆய் சுற்றவிடாது
DO-வாய்
தந்துவிடு SWEET-ஐ !

இனி கொண்டாட்டம்
RUN செய்யப்படும்!
COMPILE தேவையில்லை!
ERROR என்று ஏதுமில்லை!

GETCH போட்டு RECEIVE பன்னிக்கோ
வாழ்த்துக்களை OUTPUT-ஆக!
EXECUTE செய்ய மனம் திழைக்கிறது
மகிழ்ச்சியாக!

RESULT
“HAPPY MOMENTS”

கலைஞர்!

புகழ் மறையா சூரியனே!
பூ என்று உதிரா சூரியகாந்தியே!
மறையா கதிரொளியே!
மாந்தர்தம் விழிச்சுடரே!
மறைந்தும் போனதேனோ!?

இப்போதும்,
துளிக்கண்ணீர்
மறைக்கும் கண்களில்
வியந்தே பார்க்கிறேன்
சிந்தை கவர்ந்த பெருந்தலைவா
உன் உடல் மட்டும் மேற்கொண்ட
இறுதி யாத்திரையை!

உயிரும், புகழும்,
உன் உற்ற தமிழும்,
கற்றதோர் நல்லறிவும்
நானிலத்தில் எம்மோடே
இருக்கும் எந்நாளும்!

#கலைஞர்

நம்பிக்கை!

வாழ்க்கை எதுவென்று
தேடல் நாம் கொண்டு
தேடி செல்கையிலே

இன்பம் வரும் துன்பம் வரும்
உயர்வு வரும் தாழ்வு வரும்
காதல் வரும் பிரிவு வரும்
நட்பும் வரும் பகையும் வரும்

நடுங்கிடாதே துயர் கண்டு!
ஒடுங்கிடாதே பகை கண்டு!
வெகுண்டு எழு சினம் கொண்டு!

தோல்விகளை தோள் தட்டு
முயற்சி எனும் முதல் கொட்டு
வெற்றி எனும் முரசு கொட்டு!

உனக்கென்றும்... எனக்கென்றும்...
நமக்கென்றும் வாழ்வுண்டு!
வாழ்ந்திடுவோம் மகிழ் கொண்டு!

வா! வா! என் தோழா!
எழுந்து வா! என் தோழா!

#இளையபாரதி

Tuesday, 21 August 2018

செல்ல நண்பன் - ராமு!

அன்பின் மொழியறிய
இனம் என்றும்,
உறவென்றும் ஏதும் உண்டோ!?

அன்னையின் பேரன்பில்
மகவென்றும்,
மற்றோரென்றும் பிரிவுண்டோ!?

இன்னொரு புதல்வனாய்
இருந்த பெரும் நண்பனாய்
உயிர் கலந்த
செல்லமாய்-ராமு!

கால் நீட்டி கரம்பிடித்து,
வால் ஆட்டி அன்பை பரப்பி,
சேயென மடியில் தூங்கி,
இல்லம் எங்கும் உலவிய
உன்னதன் - ராமு!

அறியாதார் வந்த போதெல்லாம்
ஆளை மடக்கி
நிறுத்தி வைக்கும்
வாசலில்!

அவர்...
நண்பரென்ற உறவை அறிந்து
அன்பையே நிரப்பி வைக்கும்!

ஒரு நாளேனும் அன்னையை(மாரியம்மா அத்தை)
காணவில்லை என்றால்
அன்னம்...தண்ணி... துறந்து நிற்கும்!

எங்கு நாம்
சென்ற போதும்
ஏக்கத்தில்
கண்ணீர் வடிக்கும்!

இன்னுமே
மெத்தையின்றி
வேறெங்கும் உறங்க மறுக்கும்!
முதுகு தட்டி எழ சொன்னால்
கண்களை சிமிட்டி வைக்கும்!

இன்று மட்டும் எப்படித்தான்
நாம் அழுதபோதும்
எழ மறுத்தாய்!
இறப்பென்று பிரிவு சொல்லி
எங்களை கலங்க வைத்தாய்!

நான்காம் மகனாய் நாளெல்லாம் துணை நின்றவா...
நீயும் முடிந்தால் எழுந்து வா!

அன்னை மடி
நீயின்றி
வெறுமையை உணர்ந்து இருக்க...
என் கண்கள் உன் அருகில்...
அமர்ந்தே கண்ணீர் சிந்த...
வாலாட்டும் சேட்டை மறந்துவிட்டாய்!

இயற்கையின் அழைப்பென்று
இருக்கவா முடியும் எங்களால்!
உன் பிரிவில் வாடுகிறோம்
ஒவ்வொரு நாளும்!

#ராமு #ராமு #ராமு

Sunday, 19 August 2018

வா.. வா.. பெண்ணே..வா!

உலகம் உனதாய் இருக்கும்
வாடி பெண்ணே!
தடைகள் இனியும் உடையும்
வாடி பெண்ணே!
பெண்மையின் புகழை
உலகம் உணரும் வாடி பெண்ணே!

நீ வந்தால் நதியாய் வருவாய்...!
நீ வந்தால் நெருப்பாய் இருப்பாய்...!
நீ வந்தால் நிலவும் வெல்வாய்...!
வா.. வா.. பெண்ணே..வா!

இணையத்தில் இணைந்தும் இருப்பாய்!
தடையங்கள் வைத்தே வெல்வாய்!
மடமைகள் புதைத்தே வருவாய்!
வா.. வா.. பெண்ணே..வா!

சிறை வைத்த கூட்டத்தை ஒழிப்பாய்!
பறை வைத்து வெற்றியை உரைப்பாய்!
தடை என்ற விளங்கினை உடைப்பாய்...!
வா.. வா.. பெண்ணே..வா!

தடை என்று எதுவும் இல்லை!
பெண்ணென்றால் அடிமை இல்லை!
ஆணுக்கு குறைவும் இல்லை!
வா... வா.. தீ முல்லை!

பூவைத்தான் நெருப்பில் வைக்க
இனி யாரும் துணிவது இல்லை
புயலைத்தான் புடவையில் மறைக்க
இது ஒன்றும் பழங்கதை இல்லை!
வா.. வா.. பெண்ணே..வா!

நெருப்பென்றே திமிறி எழுந்து
நெஞ்சத்தில் துணிவை விதைத்து
புயலாக நீயும் எழுந்து
வா...வா... பெண்ணே...வா!

Saturday, 18 August 2018

பனிக்காற்று!

முகிலோடு தவழ்ந்திடும் பனிக்காற்றே...
முன்னே வந்து மோதிடு பனிக்காற்றே...
வெண்மேகம் கூட்டிவா பனிக்காற்றே...
விருந்தொன்று வைக்கிறேன் பனிக்காற்றே...

என் மேலே படர்ந்திடு பனிக்காற்றே...
இதயம் படர்ந்திடு பனிக்காற்றே...
இரவாக சேர்ந்திடு பனிக்காற்றே...
இமை ஓரம் உலவிடு பனிக்காற்றே...

என் காதல் கேட்டிடு பனிக்காற்றே...
அவள் காதில் சொல்லிடு பனிக்காற்றே...
அழகான மாலையில் பனிக்காற்றே...
அவள் மடி தவழ்ந்திடு பனிக்காற்றே...

புல்மேலே கிடக்கிறேன் பனிக்காற்றே...
அவளிடம் சொல்லிடு பனிக்காற்றே...
நான் காதல் சொல்கையில் பனிக்காற்றே...
துணையாக இருந்திடு பனிக்காற்றே...

தூரிகை பிடிக்கையில் பனிக்காற்றே...
நீ வந்து அமர்ந்திடு பனிக்காற்றே...
அவள் முகம் வரைகிறேன் பனிக்காற்றே...
வண்ணங்கள் சேர்த்திடு பனிக்காற்றே...

பேரழகி அவளென பனிக்காற்றே...
உண்மையை பரப்பிடு பனிக்காற்றே...
அவள் முகம் பார்க்கையில் பனிக்காற்றே...
வெட்கத்தை தவிர்த்திடு பனிக்காற்றே...

விண்மீன் அழைக்குது பனிக்காற்றே...
நீ என்னோடு இருந்திடு பனிக்காற்றே...
அவள் கனா செல்கிறேன் பனிக்காற்றே...
அன்பினை சொல்லிடு பனிக்காற்றே...

#இளையபாரதி

Thursday, 16 August 2018

கலைஞர் மறைவு - இரங்கல் !😢

அஞ்சுகத்தின் நெஞ்சம் நிறை மன்னவா
எம் ஆறறிவை
இயங்க வைத்த
தலைவா...!

நித்தமும் வஞ்சக மனிதர்
வழி மறிக்கும் வாழ்வில்
வாள், வில்லென
சொல்லாயுதம் ஏந்தி
சுழன்றடித்த சூரியனே!

கலங்கரை விளக்கென
நூற்றாண்டாய்
தமிழ் ஒளி வீசிய
கதிரவனே!

கண்ணீர் மழ்கும்
கனவிலும் காணா
சோகம் தந்து
சென்றது ஏன்!

விடியும் சூரியன்
மறைவதென்பது
இயற்கையே என்றானாலும்
நாளை விடியும் எனும்
நம்பிக்கையோடு
இரவை கடந்த
எம் இதயங்களில்
இன்றைய காரிருள்
அச்சத்தை விதைக்கிறதே!

சமூகம் நியதியற்று
சாதிய கொடுமைகளால்,
அதிகார அடக்குமுறையால்
அல்லல் பட்ட நாட்களில்
சமூக நீதி காத்த
கலைஞரே!

இந்திய ஏகாதிபத்தியம்
அடிமைசாசனம் எழுத
முயலும் வேளையில்
தவிக்க விட்டு சென்றதேனோ!

குடிசை விளக்கு தந்து
மங்கையர் மணபரிசு தந்து
முதல் பட்டதாரி சலுகை தந்து
மருத்துவம், பொறியியல்
என கல்விநிலையம் தந்து
இட ஒதுக்கீடும் தந்த
அன்பு தலைவா...!

இன்றும் புதையிடம் வேண்டும் எனும்
"இட ஒதுக்கீடு" போராட்டம் செய்து....
எத்தகைய உயரம் சென்றாலும்
மனித வாழ்க்கை
போராட்டம் என்றானதுதான்
எனும் தத்துவம் தந்து செல்லும்
தலைவா...!

மனம் வெறுத்து
வாழ்க்கை முடக்கி போகும்
எத்தகைய மனிதற்கும்
வாழும் வல்லமை தரும்
வாழ்வை வாழ்ந்து காட்டினாய்!

மரணம் இயற்கையின்
சுழற்சி என்றாலும்
ஒதுங்கி போய்விடா
பெரும் சோகம்
இதயத்தில் வாள் வீசுதே!

தமிழ் பேசும் உன்பேனா
வார்த்தை மவுனிப்பை செய்தது ஏன்!?

எழுதி தீர்ந்ததோ
அன்பு உடன்பிறப்பே என்று....
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
எம்மை சற்றும் மீளா
துயரில் மூழ்கடித்தாயே!

தமிழ் தாயும்
தடுமாறித்தான் போய்விட்டாலோ
"காலமானார் கலைஞர்"     என்று
எப்படி எழுத துணிந்தாள்!

துயரில் துயில் மறந்து
கண்ணீரில் மிதக்கிறோம்!

நான் சுயநல வாதிதான்...
RIP என்று சொல்ல மாட்டேன்
ஒருபோதும்
சாந்தப்படுத்திவிடாதே
உன் ஆன்மாவை!

எம்மோடு இருக்க செய்து
எதிர்வரும் துயரில்
போராடும் வல்லமை தரசொல்லி
துணை நிற்க சொல்!

ஓய்வில்லா சூரியனே....
ஓய்விற்குத்தான் சென்றிருக்கிறாய்.....

காத்திருக்கிறோம்....
கலைஞரே!

#இளையபாரதி

வயல்வெளியில் ஒரு விவசாய பெண்!

பச்சைப்புற்களின்
மெல்லிய தாலாட்டில்
நுனி உறங்கும் பனித்துளிகள்
பிரதி எடுத்துக்கொள்கின்றன  புன்னகையில் மகிழ் பரப்பும் பேரழகியை!

நாளைய
சோற்று பருக்கைகள்
கருக்கொண்ட இன்றைய பொழுதில்
சேற்று ஒப்பனையில்
சிரிப்பழகி!

வறப்போரம் வந்துசேரும்
தண்ணீரும் அவள்
கால் பணிந்தே
நாற்றுகளிடை சென்று சேரும்!

வயலில்
வாய்நிறைய புன்னகை பூத்திட்ட
தாய் நிலத்தின்
தமிழ்ப்பெண்ணிவள்!

மேனி தீண்டும் ஆடையிலே
போலி மினுக்கில்லை
சேறு நிறைந்த சேலையிலே
பேரழகும் குறைவில்லை!

மின்னும் மூக்குத்தி
சொல்லும் தனிக்கவிதைகள்
கேட்டே முளைத்தெழும்
நாற்று மழலைகள்!

நெற்கதிரென்னும்
பசுமை போர்த்திய
பொன்னாடையே
இவள் உழைப்பிற்கு
பேரங்கிகாரம்!

நாளை
வரும் சோற்றுப்பருக்கைகள்
வீண் செய்யா
நன்செயலே
நாம் தரும் தேசிய விருது!

#இளையபாரதி
#விவசாயம்

தங்கை மகள் - ஹாசினி

அன்பின் மொழியில்
ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும்
என்னை பார்க்கும் போதெல்லாம்
"மாமா..."  "மாமா..." என்கிறாள்!

காரணம் இன்றியே
கண் அடிக்கிறாள்!

எங்கோ தொலைவில்
நான் இருப்பதாய்
ஒவ்வொரு முறையும்
பறக்கும் "முத்தம்" தருகிறாள்!

நான்கு பற்கள்
நன்றாக தெரியும் படி
மழலை மாறா
புன்னகை பூக்கிறாள்!

எனக்கென்றே நலினமாய்
நடந்து காண்பிக்கிறாள்...!
அள்ளி அணைக்கச் சொல்லி
வாஞ்சையோடே
கரங்கள் நீட்டுகிறாள்!

இத்தனை நாட்கள்
இல்லாத காதலை
காவேரி என
கரை புரள வைக்கிறாள்!

ஆயுளின் பெருமகிழ்வை
அங்கம் தோறும் நிறைக்க வைத்து
நெஞ்சில் இன்பத்தேன்
நிறைத்து வைக்கிறாள்!

அவள்...அவள்....
ஆம்... அவள்...

என்...
அன்பு தங்கை மகள்...

ஹாசினி...!

#தாய்மாமன்
#இளையபாரதி

காதல் மழலை

மீசை முறுக்கி மின்னல் தரித்து
ஆசை கணவன் அருகில் வர
பாச வலைவீசும் பெண்ணால்
நேச கரம் நீட்டி நெஞ்சில் அணைக்கிறாள்!

காசுக்கடவுளை தேடிக்கொணர்ந்திட
நாளும் கிளம்பிடும்
நன்முத்து மணியை
பாவை உதடுகளால்
முத்தமிட்டு நெற்றி நிமிர்கிறாள்!

வாசல் படிவரை
வந்து நின்று வழியனுப்பி
பறக்கும் முத்தங்களை
பட்டம் விடுகிறாள்...!

வீசும் காற்றிலே
விரைந்து பறந்திடும் முத்தம்
அவனுக்கு முகமலர்ச்சி தந்து
வேலை சென்றிட
வழியனுப்பி விடுகிறது!

நாளும் பொழுதெல்லாம்
நங்கை காத்திருக்க
வரும் மாலை வேளையில்
மல்லிகையை தன்கை கொணர்ந்து
பாசமங்கையின் வாச குழலிலே
வஞ்சயோடு வைக்கிறான்!

இரவு பொழுதங்கே
விரகம் தந்திட
பரதம் ஆடும்
பைந்தமிழ் முத்தங்கள்
பொன்மேனி ஊர்ந்தே
காம ரசத்தினில்
கட்டில் நிரப்புது!

ஆடை துறந்திட்ட
நாணல் மேனிகள்
நலினமாகவே காதல் பேசிடும்
வேலை வந்தங்கு
விரகதாபம் விதையுமாகுது!

மழலை ஒன்றங்கே
மடியில் சேர்ந்திட
குவியல் குவியலாய்
மகிழ்வங்கே நிறைகிறது!

மனங்கள் யாவுமே
மழலை பேசிட
நற்குணங்கள் யாவுமே
நளினம் காட்டுது!

அன்பு மொழிகளில்
அன்னைதந்தையர்
பாசம் காட்டிட
உலவும் இறையென
பழகும் குழந்தையும்
மலர் போலவே
மனங்கள் நிறைக்குது!

மழலை பேரானந்தம்!

தலைவனுக்கு ஒரு கடிதம்

வா! வா! தமிழா!
கருணையின் முகிலாய்!
முத்தமிழின் முதல்வனே!
எத்திக்கும் நின்புகழ்
இசையென ஒலிக்கும்!!!

உன்னைவிட பெருமையும் இல்லையே!
உன்னிடம் இமயமும் சிறுமையே!
உம்மைஈன்று தமிழுக்கு அணிபூட்டிய
அஞ்சுகத்தின் நெஞ்சுநிறை நின்ற எம்மன்னவா!
உம்பேனா வடித்த இரத்தமெல்லாம்
தமிழின் தியாகம் சொல்ல
சிந்திய சித்தாந்தமன்றோ?!!!

பொன்மாலையென நீவிர் சூட்டிய
பன்மாலை பாமாலை – அதுவே
தமிழின் பூமாலை புகழ்மாலை!!!

கள்ளமில்லா கள்வனே
ஏன் திருடினீர் ???
எம்கோடித்தமிழர் இதயத்தை!!!
உயிர்த்துடிப்பெல்லாம் உம்மிடமே!

பயிர் வாடியதற்காய்
உயிர் வாடிய தமிழன்
வாழ்ந்திருப்பானே நீ வாய்த்திருந்தால்
அரியணை நீ வாய்த்திருந்தால்!!!
உம்மிடத்தில் இல்லாதுபோன
இறைவனும் இருப்பானேயானால்
உம்மைப்போல்தானே எமக்கு!!!!

அரியணை உம்மை அமர்த்தி
பெருமை கொண்ட நாட்கள்தான்
யாமெல்லாம் உயிர்வாழ்ந்த காலம்!!!
யாக்கையும் காக்கைகொள்ள
உயிரற்ற ஜடமாய் வாழ்கிறோம் இன்று ,
உம்மிடம் மறுத்த செங்கோலால்!!!

கபட நாடகத்தில்
கண்துடைப்போரெல்லாம்
அரியணை கண்டதால்
நூற்றாண்டுகள் கண்டிரா சோகம் – ஆனால்
நூறாண்டுகள் போற்றும் சாதனையாம் – மடையர்கள்!!!

கொள்ளையும் கொலையும்
கொடுங்கோல் நடையும் வலம்வர
மழையும் களைய
மலையும் வளையும்
இவர் செய்யும் கொடுமையால்!!!

கருத்தின் கழுத்துக்கு கயிறுதந்து
பேனா நுனி உடைத்து
“சென்னாப்போதர்” வாழ்ந்த தமிழ்நாட்டில்
சொல் “நா” அறுக்கத்துடிக்கும்
அநியாயம் தான் நாட்டில்!

காட்டில் உள்ளோறாய்
சிரம் தாழ்ந்து
கரம் பணிந்து
வீரத்தமிழன் கர்வம் தொலைத்தனர்
இன்று அமைச்சரவை மந்திரிகள் – வெட்கம்!!!!

நடை மறந்து குழந்தையென நீவிர்
தவழ்ந்தபோதும் தரணிபோற்றும் நின்செயல்
தமிழர்க்கு என்றென்னும்போது
இருநூறாண்டு இளமைபெற்ற எம்தோழா
யாமிருப்போம் நின் தோழாய்!

தமிழமுதென்ற சொல்லால்
நின் ஆணை ஒன்றே போதும்
வாளாய் வேலாய்
வறுமை கொல்லும் வில்லாய்
அணை கட்டித்தடுக்கப்பட்ட
எங்கள் இரத்தமெல்லாம்
புயலென பொங்கி
புரட்சி செய்யும் தமிழ் நிலத்தில்!

நம் உயிர் தமிழுக்காய்!
குறளால் “திருக்குறள்” தந்து
தரணிக்கும் தலைவனாய்
தமிழனை உயர்த்திய
வள்ளுவனுக்கு வான்தொடும்
சிலை தந்த வாழும் “வள்ளுவரே”!!!

மலையென நின்புகழ் உயர
இன்று வந்தவர்
உளியென குடையப்பார்க்கிறார் – உம்மையும் ,
உப்புக்காற்றால் குடையப்பார்க்கிறார்  வள்ளுவரையும்!!!!

அதற்கும் “நா” தந்து காத்த கருணையே
உமைக்கான வேண்டும் கண்களே!!
எந்தன் கண்களே!!!
வாய்ப்பொன்று கிடைக்குமா ???
வான் சூரியனை காண!!!???

உதயசூரியனாய் உள்ளத்தில்
உதிக்கும் உன்னதமே
உன்னிடம் உருகும் என் அகமே!!!!
என்பால் உள்ள தமிழால்
உன்பால் கொண்ட அன்பால்
பண்பால் உயர்ந்த பகலவனுக்கு – கடிதம்!
என்றும் என்றென்றும்
நின்பால் அன்புகொண்ட உடன்பிறப்பு!!!

இளங்கோ பாடல்

அடியே கருப்பி...
ஏண்டி life-u ல வந்த பசப்பி...
ஏன் மனசுல...
உன்ன வச்சு நிரப்பி...
என்ன செஞ்சு போயிப்புட்ட... கருப்பி...

single மனச
Mingle ஆக்கி சென்றவளே..
Jungle பூச்சி போல
என்ன கொன்றவளே...

காட்டுதீயை
கண்ணில் வச்சு சாச்சுப்புட்ட
உன்னில் என்ன
மூழ்கடிச்சு போயிப்புட்ட

ஒரு நாளும்
நீயின்றி போகாதென்று
நிழல் போல
நெஞ்சத்தில் நெரஞ்சுப்புட்ட

ஏண்டி செல்லகருப்பி
என்னில் காதல் நிரப்பி
இப்போ நீ மட்டும்
தனியாக போனாயே
ஏண்டி...??? செல்லகருப்பி?

உன் உறவெல்லாம் இப்பக்கூட பொய்தானடி...
உன எண்ணி வாழ்ந்த நானும்
தெரு ஓரம்டி...

உன்னாலே விசமாகி
உள் நெஞ்சம் ரணமாகி
பெரு நெருப்பொன்னு
எரியுதடி...

காதல் ஒரு வானவில்லு..
கதை விட்டியே...
வெறும் கொஞ்ச நேரம் தானேயின்னு கெளம்பிட்டியே...

நரபலியும் என்ன போட்டுவிட்டியே!
நரம்பிளையும்
காதல் ஏத்தி விட்டியே!

ஒருவார்த்தை பேசாமல்...
ஒரு பார்வை பார்க்காமல்...
நெடுநாளாய் நீ இல்லை...
நெஞ்சத்தில் தீ முள்ளை...
எரிந்தேதான்...கொன்றாயோ...
பிரிந்தே தான் சென்றாயோ...

காதல் மொழியாலே
சாதல் வரம் தந்து
என்ன செஞ்ச என்னை?
நீ இல்லா நிமிடங்கள்
அனல் தீயாய் கொதிக்கிறதே...

வெறுப்பென்ற மொழியாலே
கருப்பான மை பூசி
அழித்தாயே..சிதைத்தாயே...

பெருந்தீயில் பூ ஒன்றை...
புரியாமல் எரிந்தாயே?

ஆனாலும்
உம்மேலே வச்ச காதல்
கோபமாக
என்னுள் இன்னும் வாழுதடி!

Thursday, 26 July 2018

கல்லூரி வாழ்க்கை

வணக்கம்,

இந்த மண்ணில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பள்ளி, கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு பேரின்ப அனுபவம்.

அப்படியான ஒரு அனுபவத்தை தந்த MCA படிப்பை படித்த, கல்லூரி நாட்களை திரும்பி பார்க்கிறேன்.


Wednesday, 25 July 2018

முண்டாசுக்கவி

முதல் சூரியஉதயம் கண்ட
தமிழனின் தலைப்பிள்ளை!
எரிதனலை எழுத்துக்களில்
படைத்திட்ட கவிப்புனலே – பாரதி!

கார்மேகம் கூடியும் மழை பொய்த்திருக்கலாம்!
உன் கரங்கள் தீட்டிய
கவிமழை பொய்க்கவில்லை!

இரும்புக்கரங்கள்
இன்னல்கள் தந்த போதும்
இடை நில்லா பாரதியே!
உன் முண்டாசு அவிழ்த்த
கவிதைகள் தான்
எத்தனை எத்தனை!

உணர்வுகளை உயிர் பெறச்செய்த உயிரெழுத்து – நீ!
இனி உதயமாகும்
எந்த ஒரு கவிஞனும் உன்
மெய்எழுத்தே- பாரதியே!

காணி நிலம் வேண்டி
நீ அழைத்த பராசக்தியும்
பாவமனிதர்கள் கைவசம் போனபோது
பெண்ணுரிமை பேசிய ஆண்மகனே!

ஆனந்த சுதந்திரம் அடைந்தோம் என்று
ஆரவாரம் செய்தவனே
கலைமகளின் கவிப்பிள்ளை – நீ!

உன் கண் விழித்த காட்சிகளை எல்லாம்
கவிதையாய் படைத்தவனே
என் ஒரு கவிதை உனக்காக!
உன் இனிய பிறந்தநாளில்!

#இளையாபாரதி!

Sunday, 22 July 2018

பேரன்பு எனும் திரைப்படம்

பேரன்பே!
பெருமழையே...!
நீ இங்கே பொழிவதினால்
உயிர்வலியும் தெரிவதில்லை!

உறவுகளில் நீ இருக்க
உரிமைகளில் குறையுமில்லை!
உடலதுவில் குறையென்று
படைத்திட்ட இறவனிடமும்
பகை என்று ஏதுமில்லை
பேரன்பே நீ இருக்க!

மனதினில் மகிழ்தனை
பிறப்பிக்கும் உயிராக
மகள் இங்கு பிறந்திருக்க
இதழ்தனில் பெருவெள்ளம்
இன்பமாக சிரிக்கிறதே!

ஒரு போதும் உனையன்றி
என் ஜீவன் வாழ்ந்திடுமோ!?
உயிராக நீ இருக்க
இறப்பென்றும் வந்திடுமோ!?

மடிதனில் உறங்கி
இரவுகளை வென்றிடும்
இனிமைகள் நீ தர
ஒரு போதும் இதயத்தில்
வலி என்று தோன்றிடுமோ!?

கண் எதிரே நீ இருக்க...
கனவுகளில் தேவதையை
காண்கின்ற மூடனில்லை-நான்!

பேரன்பே...!
நீ பொழிவாய்...
பெருமழையாய் என்றென்றும்...
நீ பொழிவாய்...
பேரன்பே...!

சென்னையில் ஒரு மழைக்காலம்

சென்னையில் ஒவ்வொரு நாளும்!...

மாலை வரும் வேலையெல்லாம்
மழை இங்கு வருகிறதே!

சோலை தந்த காற்றாக
குளிர் காற்று அடிக்கிறதே!

பேருந்தின் ஜன்னல் வழியே
மழைத்துளி நுழைகிறதே!

ஊர்ந்து செல்லும் உயிராக
வாகனங்கள் வரிசை கட்ட
குறுக்கு சந்தெல்லாம்
டிராஃப்பிக் போராட்டம்... !

சேரோடு சகதியும்
சேர்ந்து கொண்டு நாற்றம் தர
சாக்கடையும் பொங்கி வர
மனிதருள் ஒருவனே உள்ளிறங்கி

அள்ளி ஏறிய
ஒன்றும் அறியாதவரென மக்கள்
மூக்கில் கைவைத்து
விரைந்து கடந்து செல்ல

உயிர் பிழைக்க வந்தவரெல்லாம்
தன் வழியே நடந்து செல்ல
யாவற்றையும் தாங்கிக்கொண்டு
'தம்' பிடித்து சகித்துக்கொள்கிறது சென்னை!

#சென்னைவாசி

#இளையபாரதி

Saturday, 21 July 2018

சோறு! அதானே எல்லாம்!

உன் வாசம் பட்ட போதெல்லாம்
எனை மறந்தேன்!
என்னாளும் நீ இருக்க உயிர் வளர்த்தேன்!

ஒரு நேரம் உன்னை பிரிந்தாலும்
உடல் வியர்த்தேன்!
உன் நினைப்பில் கரைந்தே
நான் மகிழ்ந்தேன்!

மரணித்தும் விடுவேன்- நீ
என்னோடு இல்லை என்றால் - நான்
மரணித்தும் விடுவேன்!

ஆம்...
நீயே என் சொர்க்கம்....
நீயே என் ஜீவன்....
நீயே என் காதல்...

அந்த நீ....

#சோறு...#சோறு...#சோறு

#நமக்கு_சோறுதானே_முக்கியம்

Office காதலி

அருகில் இருக்கிறாய்...
அழகென மிளிர்கிறாய்...
தொலைவில் செல்லும் போதும்
ஜிவ்வென இழுக்கிறாய்!

கண்கள் மோதும் நேரம்
சிரிப்பினை உதிர்க்கிறாய்!
இமைகளில் எனை மறைத்து
இதயத்தில் ஒளிக்கிறாய்!

சிந்தையில் மின்னும்
சிறுபொறி தீயென
காதல் காட்சிகள்
கண்களில் காட்டும்
வித்தைகள் உனதோ!??

வென்றுவிடத் துடிக்கிறேன்
உன் வெள்ளந்தி சிரிப்பினை!
மீண்டும். .மீண்டும்... உன்முகம்
என்கண்களில் படும்போது
இதயம்
காதல்...காதல் என்றே
துடிக்கிறது...

அலுவலகத்தில்
உன் அலுவல் இது தானோ!?
கொஞ்சம் வேலை செய்ய விடேன்
காதல் மொழி பேசும் நம் விழிகளை!

#இளையபாரதி

பெண் மகவு

காதல் வாழ்வின்
கற்பனை பறவையாய்
கரங்களில் சேர்ந்து
சிறகுகள் விரித்த
சின்ன தேவதையே!
வருக! வருக! இப்பூமிக்கு!

உன் முதல் அழுகை எனும்
பேரானந்த ஒலி கேட்டே
மீண்டும் உயிர்த்திருப்பாள்
பிர'சவ' வார்டில் உன் அன்னை!

எகிறிய என் இதயத்துடிப்பை
உன்னை கரங்களில் அணைத்தே
கட்டுப்படுத்தினேன்!

பெண் தேவதையே - உனை
கண்களில் கண்ட மகிழ்வினை
கண்ணீர் மொழியில் பகிர்ந்தேன்!

எங்களின் இன்னொரு உயிராக
புனிதம் நிறைந்த
பெண் இனத்தில் உதித்தவளே!
வருக! வருக!

நெஞ்சில் அணைத்து,
தோள்களில் தூக்கி
கொஞ்சி மகிழ்ந்து
முத்த மழையில் நனைத்து
அன்பில் உனை ஆட்கொள்ள
காத்திருக்கிறோம்...
அன்னையும் நானும்!

மழலை மொழிபேசி மகிழ்விக்க
வாடி ராசாத்தி!
சிரித்து வாடி ராசாத்தி!

#பெண்_மகவு

நீ வேண்டாம் பெண்ணே!

கண்கள் மோதி காயம் பட்டு
இதயம் வலிக்கிறதே!

உன் மௌனம் பேசும் பாஷை எந்தன் செவியில் அறைகிறதே!

உன் நித்திரை செய்யும் வேலை என்ன சொல்லடி பெண்ணே!?

உன் கனவில் என்னை
உலவச்செய்து
இம்சை செய்பவளே...

மூச்சு காற்றை முகத்தில்
வீசி வன்முறை செய்கின்றாய்!

சிறு முத்தம் என்றே கொஞ்சம் தந்து
என் வார்த்தை சிதைக்கின்றாய்!

வேண்டாம்... வேண்டாம்..
ஏதும் வேண்டாம்...
என்னை விட்டுவிடு...

நீயா... நானா... போட்டி
ஏதும் இனிமேல் வேண்டாமே!

நீயும் நானும்...
நாம் என்ற சொல்லும் வேண்டாமே!

ஈழ நிலம்

யாதென்று ஞான் ஏது சொல்வேன்?
தீதென்று தெரிந்தும் துணிந்து செய்த
சூது வளர்த்த சாத்தான் பிள்ளைகள்
கருணாக்கள் காட்டிக்கொடுக்க
வீழ்ந்து மடிந்த வீரத்தின் பிள்ளைகள்
தியாகம் இதுவென சொல்வேன்!

நெஞ்சில் பாயும் தோட்டாக்கள்
தோரணங்களாய் மாறிப்போக
மறித்து போன எம் வீரர் கூட்டம்
வீழ்ந்ததே பன்னாட்டு சூழ்ச்சியால்!

பெண் பிள்ளை என்றோ,
பச்சைப்பாலகன் என்றோ
போர்மரபு காணா
குருடர் கூட்டம்
குதறித்தள்ளிய உயிர்கள்
பட்ட பாட்டை என்ன சொல்வேன்!?

உதிரம் சதையோடு ஊறிப்போன மண்
உரமென ஏற்றுக்கொண்டதே
பெருமறவர் தியாக உடல்களை!

விதை என்றே விழுந்த இனம்
எழுந்து வருமே! திமிறி
எழுந்து வருமே!

#வீரவணக்கம்

தூத்துக்குடி துயரம்

அறமும், ஆகச்சிறந்த சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும், சகிப்புத்தன்மையும்
கொண்ட எம்மக்கள் நிலத்தில்
எது நடக்கக்கூடதோ அது நடந்துவிட்டது...
இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

மனம் சொற்கள் சொல்ல
இயலா துயரத்திலும்,

இதயம் அமைதிபடாத நடுக்கத்துடனும்,

நெஞ்சம் ஏதும் செய்ய இயலா ஆற்றாமையுடனும்,

உள்ளம் வெதும்பி கொண்டிருக்கிறது.

மீண்டு வரவேண்டும் எம் பேரினமே!

வீரம் ஒதுக்கி விவேகம்கொள்...

வெளிவேசம்

அணையாத நெருப்பொன்று
ஆகாச வானில் பறந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
சிறுதுளிகள் வீசிச்சென்று
மொத்தமாய் விழுந்ததாம்
எண்ணெய் கிணற்றில்...!

வேடிக்கை நிகழ்வென
சிறுபிள்ளை போல
பின்சென்று பார்த்த
பொத்தாம் பொது கூட்டம்
திப்பென பற்றி எரிந்ததாம்
பெரு நெருப்பில்!

அடுப்பங்கரை தீப்பொறி தானென
அனைவரும் நினைத்திருக்க
அங்கோர் ஆள் நின்று
எறிந்ததை பார்த்தானாம்-ஒருத்தன்!

ஐயோ அம்மா என அலறிப்பதறி
சிதறி ஓடிவந்தவன்
கூறி முடிக்க
கதறி அழுதனராம்- அம்மக்கள்!

எறிந்தவன் ஊர் காவலனாம்...
அதை செய்ய சொன்னவன்
பண்ணையாராம்-வந்து
தந்தானாம்
தலைக்கு 10 படி அரிசி!

கொடிய அரசு

ஓ அரசே!
உன் பற்களில் ரத்தக்கறை...!
இதோ எம்மக்களின் எழும்பு துண்டுகள்-நீங்கள்
பல் குத்திக்கொள்ளுங்கள்!

ஓ அரசே!
இதோ எம்மக்களின் பிணங்கள்...
நீங்கள் ஓட்டு வாங்கிக்கொள்ளுங்கள்!

இதோ கண்ணீர் கடல்...
நீங்கள் நீச்சல் அடித்துக்கொள்ளுங்கள்!

ஓ அரசே!
இதோ சிதறிய சதைகள்...
நீங்கள் நடந்து செல்லுங்கள்!

இதோ இரத்த வாய்க்கால்
நீங்கள் கால் கழுவிக்கொள்ளுங்கள்!

ஓ அரசே!
இதோ எங்கள் கதறல்கள்...
நீங்கள் இசையென கேளுங்கள்!

இதோ
எங்கள் வாழ்க்கை...
நீங்கள் சீரழித்துக்கொள்ளுங்கள்!

ஏனென்றால்,
நீங்கள் ஆட்சியாளர்கள்
நாங்கள் அடிமையானவர்கள்!

சாதிய தீங்கு

தனிப்பெரும் சாதியென
அகமகிழ்ந்து
உயர்ந்தே பிறந்தேனென
உவகை கொண்டு

சேவகம் செய் என்றே
பிறரை நிந்திக்கும்
அகந்தை மனிதனே...!

உன் அடிசிந்தையை கிளரிப்பார்
மனிதன் எனும் நிலையை நீ
இழந்து விட்டதை!

கூர் அரிவாள் கொண்டே
குருதி வெள்ளம் ஓட செய்த
கேவளத்தை
பெருமை என்றே எண்ணிச்சாகும் சதைப்பிண்டமே
உன் இதயத்தில்
மலம் கலந்ததை கிண்டிப்பார்!

உன் நிர்வாணம் மறைத்த ஆடையிடமும்,
பசி போக்கிய சோற்றிடமும்,
உன் நாசி புகுந்த காற்றிடமும்
கேட்டுப்பார்...!
எத்தனை சாதி மனிதரை
தொட்டு வந்ததென???

பிணமாகி போன பின்னே
உன் சிதை எரிக்கும் நெருப்பும்,
புதைத்தால் சதை தின்னும் மண்ணும்
உன் சாதி பெருமை கேட்பதில்லை!
உன்னை அழித்தே தீரும்!

வீரம் என மடமை கொண்டே
சக மனிதனை கொள்ளும்
உன் வக்கிரத்தை
வந்தெறிக்கும் பெருநெருப்பை
தேடிக்காத்திரு
மனிதம் இழந்த இழிநிலையில்!

#பெருங்கோபம்

ரஜினி-யார் நீங்க!?

திரைபிரபலம் எனும் பாதையில் எம்.ஜி.ஆர், கருணாநிதி ஏன் ஜெயலலிதாவிடம் கூட இருந்த கனிந்த உள்ளம், இரக்க குணம் அணுவளவேணும் இல்லை.

பாசிசத்தின் மொத்த
மக்கள் விரோத கொள்கைகள்,
அடக்குமுறை மனோபாவம்,
எதேச்சதிகாரம் கொண்ட
வலதுசாரி நபராக ரஜினி
தெரிகிறார்.

இது ஏதோ அவரை விரும்பாதவர்களை 
மட்டுமே தாக்கும் என்றில்லை.

அவரை கடவுளுக்கும் மேலாக எண்ணிக்கொண்டு இருப்பவர்களையும்
கொடூரமாக தாக்கும் என்பதே
நிதர்சனமான உண்மை.

#யார்நீங்க
#யார்நீங்க
#யார்நீங்க

காத்திருப்பு

காதலோடு காத்திருக்கிறேன்...
உன் கனி இதயம் கொண்டுவா பெண்ணே!

பூக்களோடு காத்திருக்கிறேன்...
உன் வாசம் கொண்டுசேர் பெண்ணே!

ஆசையோடு காத்திருக்கிறேன்...
உன் அழகு மதி காட்ட வா பெண்ணே!

கவிமொழி கொண்டிருக்கிறேன்...
உன் உவகை இதழ் கொண்டுவா பெண்ணே!

தென்றல் கொண்டே காத்திருக்கிறேன்...
தேவதையாய் நடந்து வா பெண்ணே!

காதல் கலந்து இதயம்
புன்னகைக்கும் பொழுது தேடி
காத்திருக்கிறேன்...

அன்பில் கலந்திட மகிழ்ந்து வா பெண்ணே!

#இளையபாரதி

பொழுதுகள்

அன்பே நீ போகாதே...
தூரம் அது வேண்டாமே!
உன்னில் நான்தானே இருக்க
ஆசை கொண்டேனே!

இதற்குள் ஒரு ஆனந்தமே
இருக்கும் அதை அறிவாயோ!?
மனங்கள்...
அவற்றை விட்டுவிடு...
அவையே பேசிக்கொள்ளட்டும்...

இடையே இங்கு நாமெதற்கு
விலகி நிற்கும் நிலை எதற்கு!

வா.. வா..
என் பெருமகிழ்வே!
என்னுள் உன்னை கண்டுகொள்ளேன்!

அதனால்...
புரிதல் உண்டாகும்...
உயிரும் இனி ஒன்றாகும்..

வரும்...
பொழுதுகள் இனி நன்றாகும்!

இழி பிறவிகள்!

சுட்டுத்தள்ளுங்கள்...
சுதந்திரம் என்று இனி எதற்கு!?

எட்டி மிதியுங்கள்
ஏழைகள் என இனம் எதற்கு!?

லத்திகளை கொண்டே பேசுங்கள்
போராட்டம் என்ற உரிமை எதற்கு!?

அடித்தே புடுங்குங்கள்...
விவசாயம் செய்யும் நிலம் எதற்கு!?

வெட்டி வீழ்த்துங்கள்...
வளர்ச்சிக்கு தடை என மரம் எதற்கு!?

கட்டி எழுப்புங்கள்...
தொழிற்சாலைகள் எனும் கூடங்களை!

காற்றா முக்கியம்...?
புகை கிளப்புங்கள்...

அள்ளி குவியுங்கள்...
அதிகாரம் கொண்டே பண குவியல்களை!

விற்று தீருங்கள்...
மலையும்...மண்ணும் இனி எதற்கு!?

ஆனால்,
நீங்களும் அரசாள
நாங்களும் வாழுகின்ற
நிலை வந்த பின்னர்
இவையாவும் இனி எதற்கு....?

இழி பிறவிகள்...
நீங்கள் அரியணையில்...
மட்டுமேவா வாழ்ந்து விட முடியும்?!

இறங்கி வரும்போது
இறந்தே வருவீர்கள்...
விஷம் எம்மை மட்டுமா...
உம்மையும் கொல்லத்தானே செய்யும்!

#இழிபிறவிகள்_நீங்கள்

#இளையபாரதிகள்_நாங்கள்

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து

தமிழ் செல்லத்திருமகன் என்றும்
வெல்லப்பிறந்தவன்!
அன்பில் மலர்ந்திடும்
அழகிய தமிழ் மகன்!

எதிர்ப்புகள் நடுவே
எரிமலை என்றே
எழுந்து வந்து
வெற்றிகள் தந்த
வேட்டைக்காரன்!

திரு'மலை'போல் வெற்றிகள் குவித்தும்
'கத்தி'ப்பேசிடா காவலன்!
'ஆதி' 'மதுர' வீரத் 'தமிழன்'!

'யூத்' களின் 'கண்ணுக்குள் நிலவாய்'
'மெர்சல்' செய்திடும்
'ஜில்லா_போக்கிரி' தான் எங்கள்
 'மின்சார கண்ண'ன்!

'என்றென்றும் காதல்'இன் 'குஷி'யை
'பிரியமுடன்' 'ஒன்ஸ் மோர்' தந்திடும்
'வசீகர' 'பத்ரி' இவன்!

இந்த 'ராஜாவின் பார்வையிலே'
'சந்திரலேகா' நீதானே என்று
'பூவே உனக்காக' என 'நேருக்குநேர்'
'காதலுக்கு மரியாதை' செய்யும்
'கோயம்புத்தூர் மாப்பிள்ளை'!

'புதிய கீதை' தந்த
'சிவகாசி' 'ஷாஜகானின்'
'பிரண்ட்ஸ்' 'நெஞ்சினிலே'
'மாண்புமிகு மாணவனாய்'
'துள்ளாத மனமும் துள்ள' செய்யும்
'திருப்பாச்சி' 'பகவதி'!

'கில்லி'யாய் 'தெறி'க்கவிட்ட
'மெர்சல்' அரசன் 'சச்சினின்'
'ரசிகன்' கூட்டம் 'தலைவா' என்றே
'நாளைய தீர்ப்பு' தற
'சர்க்கார்' நடத்திட வரும்
எங்கள் 'வேலாயுதனுக்கு'

நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பிரிவு

சில நேரம் உன்னை
பிரிந்தாலும் பெண்ணே
உயிர் போகுதடி...

சிறு தூரம் நீயும்
சென்றாளே_நெஞ்சில்
வலி என்னும் மின்னல்
தோன்றுதடி!

ஆகாயம் மட்டும்
அங்கேயே நிலவை
வைத்தால் தான் என்ன???

நீ என்ற நிலவை
எனக்காக தந்து
உயிர்மேலே ஊசி_குத்துதடி!

ஒரு பார்வை போதும்...
ஒரு வெட்கம் போதும்...
சிறு முத்தம் தந்தால்
போதும்...போதுமடி...
என் வாழ்வும் புனிதம் ஆகுமாடி!

எந்நாளும் நீயே_என்
தாயின் மடி!

#இளையபாரதி

Friday, 20 July 2018

நெல்லை குடும்பம் தீ குளிப்பு - கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

ஏளனம்...
எதுவென்று தெரியா அரசன்...
மண்டியிட்டு கால் பிடித்து
மாண்டாலும் உம் அடிமை நானென
டயர் நக்கி
வாங்கி வந்த பதவியன்றோ... !

அப்பதவி...
வேலைக்காரி கால் துடைத்து
அபகரித்து வந்து
அரங்கேற்றம் செய்துகொண்டான் ஆளும் அரசன் நானென...!

ஐயகோ...
அடித்த கொள்ளை கணக்கில் பட
கம்பு சுத்தினான் வாய் வீரன்...!

கால்கள் கிடைத்தால் போதுமென்ற கும்பிடு சாமிகள்
மண்டியிட்டு மீண்டு வந்தார்
மீசை மண் படவில்லை என்றார்...!

தாம் ஏளனப்பிறவிகள் என்றே குட்டிக்கதைகள் சொன்னர்...!

கந்துவட்டி கரியாக்கிய
தீயின் சுவாளை பற்றி எரிய
ஏதுமற்று குழந்தை வீழ்ந்து கிடக்க
அரச மானம் காற்றில் பறந்தது நிர்வாணமாய்...!

ஐயகோ...
ஆடை கலைந்த மேனிபிண்டம் வரையப்பட்டதாம் கார்ட்டூனாய்...!

மாண்டு இறந்தார் நாட்டில் அரசன்... என்பதன் ஏளனம் அறியா
கால் பிடித்தார் கூட்டம்
கார்ட்டூனே ஏளனம் என்றெண்ணி
அரச கூலிப்படையனுப்பி
கடத்திப்போனதாம்
பாலனை....!

ஏளனம்...
இவர் ஆள நாம் இருத்தலா...?

பொங்கி ஏழு கவரிமானினமே...!

#பாலா
#விரோதன்

சென்னையில் ஒரு காதல் மழை!

மழை பெய்த மாலை வேளையில்
சிலை போல வந்த வெண்ணிலா
சிறுதூறல் பட்ட போதெல்லாம்
சிலிர்க்கின்ற
மேனி பொன்நிலா...!
நம் காதல் வாழும் இடமெது
உந்தன் கண்ணிலா...!

நீ போகும் பாதை எங்குமே
வானம் வந்து பூக்கள் தூவிடும்
உன் அழகு பட்டுவிட்டால்
புள்ளி மானும் துள்ளி ஓடிடும்!

உயிரின் எடை எது
உணர்ந்து மிரள்கிறேன்
உன்னிடை மாட்டி தவிக்கிறேன்...!

கண்ணிடை காதல் பேசிடும்
பெண்ணே நீ சென்னை மழையா...!
மொத்தமாய் மூழ்கடிக்கிறாய்...
சத்தமாய் ஆர்ப்பறிக்கிறாய்...!

ஆனந்த குளியல் போட்டதாய்
மேனியில் நீயும்
மிதக்கிறாய்...!

நெடு நேரம் பெய்யும் மழையென
வெகுநேரம் காமம் தின்கிறாய்...!

சில நேரம் அடிக்கும் வெயிலென
சிறு முத்தம் தந்துதான்
சூடு தகிக்கிறாய்...

சாலை எங்குமே
தேங்கும் வெள்ளமாய்
காதல் உள்ளத்தில்
நீயும் நிரம்பினாய்...!

இப்போதும் தூங்கும் அரசென
கோபம் தொலைக்கிறாய்...!

எப்போதும் அள்ளல் பட்டிடும்
இந்த மக்களில்
என் இதயம் சேர்ந்ததோ?

நீ இல்லா சில நொடிகளும்
எனை சிதைக்கப்பார்க்குதே...!

சூடான மிளகா பச்சி
கடித்த நாக்கென
இதழ் பட்ட தேகம்
எங்குமே - காதல்
காரம் ஏற்றுதே...!

ஆகாகா...
இந்த மழையும்
இன்பம் பொழியுதே...
இன்னும் இன்னும்
வேண்டும் என்றுதான் இரவு நீளுதே...!
பகலும் மறைந்து போகுதே...!

#காதல்மழை
#கவியன்பன்
#கற்பனைகாதலி
#சென்னைசூழல்

கவிதைகளின் தாய்-அவள்!

அன்று அவள் பிறந்தநாள்...
இன்று அவள்
எனக்கானவளும் இல்லை...
சில வருடங்கள் நினைவில் கூட
அவள் வந்ததில்லை...!

அன்று அவள் பிறந்தநாள்...!
அன்றைய இரவில்
இனிய மனதில் ஆயிரம் பூக்கள் மலர்ந்ததாய் அவள் முகம் -கனவில்...!

திக்குமுக்காடி போனேன்
எப்படி இந்த அதிசயம் என்று...
வைகறை பொழுதிலேயே
வாழ்த்து அனுப்பி வைத்தேன்...
அன்று அவள் பிறந்தநாள்... என்பதால்!

காதல்
ஒருநாளும் நான் சொல்லியதில்லை...!
அறிந்திருந்தும்
அவள் கேட்டதுமில்லை...!

ஆயினும்
இதயத்தின் ஓரம்
நிரந்தரமாய் இருப்பிடம்
கொண்டுவிட்ட அவள்...
என்றும் இனியவள்... எனக்கு!

அவள்...
என் இத்தனை கவிதைகளின்
தாய்...
அவள்!

தர்ம யுத்தம்....ஓ அதுவா!

நான் தர்மயுத்தம் தொடக்கி வச்ச
உத்தம செல்வன்
ரெட்டி டைரி மேட்டரெல்லாமே
இல்லைனு சொல்வேன்...!

ஆன்மா கூட பேசுன
கதையை கேட்டு
R.K.நகர் மக்களெல்லாம்
போடுவாங்க ஓட்டு...!

நாங்க டெல்லிக்கே இங்கருந்தே
காலுல விழுவோம்...!
கொஞ்சம் கெத்தாத்தான்
ரெட்டலைய வாங்கி வருவோம்...!

ஆகா...ஆகா...
நாங்கெல்லாம் CM  தாங்க..!
தமிழ்நாட்டோட தலையெழுத்து
சங்கு போங்க...!

இது கோடிகளை கொள்ளையடிக்கிற நேரம்...நேரம்..
டெட்பாடிகளை
தேடுறவன் ஓரம்
போடா...போடா...!

இன்னும்
மக்க வாழ்க்கையில வச்சுருக்க சொத்துக்களை
ஆட்டைய போடுற பிளான்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்...!

எவனாச்சும் எதுத்து வந்தா
குண்டர் சட்டம்!
ஏமாறவே இருக்கிறான்க
தொண்டர் கூட்டம்!

போலீசெல்லாம் நம்மளோட அடியாளுங்க...
அவுத்துவிட்டா நாயி போல கடிப்பானுங்க...!

நாங்க மோடிக்கு மட்டும் தான செல்லபிள்ளை...
இனி மக்களுக்கு எப்போதுமே தொல்லை...தொல்லை...!

சீட்டிங் பார்ட்டினா யாரு யாரு...
சீட்டிங் ஆட்சி தான் கூறு... கூறு...!

சூரிய சந்திரன்!

அன்பின் கருவில்
அற்புதமாய் இரட்டைப் பிள்ளைகள்!
யாருக்குத்தான் இல்லை பேரானந்தம் !

நித்தமும் வந்து போகும்
சூரிய-சந்திரனை
நாமம் சூட்டி
சுட்டி குழந்தைகள் தாலாட்டு!

எட்டு திக்கும் மழலை கீதங்கள்
மகிழ்ந்து கிடப்பதே தவமாய் மணிமேகலையும்
பிறந்த வீடல்லவோ!

ஆசை பாசுரங்கள் பாடிய
அன்னை மடியில்
வீணை நாணென
துள்ளல் இசை புரியும்
மூன்று முத்துக்கள்!
கோடி கோடி சொத்துக்களாய்!

நாளும் வளரும் வளர்பிறை சந்திரன்
தானும் வளர்ந்து
தயை பரப்பி பிறரும் வளர
கரம் நீட்டிய
கற்பக விருட்சமாய்
உயிர்த்திருக்க...

கதிர்கள் வீசும் சூரியனும்
கம்பீரம் கொண்டே
முன்னெடுக்கிறார் வெற்றித்தேரினை!

மகிழ் கூட்டில் பிறந்த செல்வங்கள் கொண்டாடும்
பிறந்த நாளினை
களி நெஞ்சில்
கொண்டாடி மகிழ்கிறோம்
அன்பு உறவுகள்...

என்றும்
இனியவர்களுக்கு
அன்பு சகோதரர்களின்
கவிமாலை
பிறந்த நாள் வாழ்த்துக்களாய்!🎉🎊🎁🎊🎊

கவிதைப்பெண்ணே!

மெல்ல மெல்ல வந்து என்னில் கலந்த பெண்ணே...
இன்னும் இன்னும் உன்னை கொஞ்சும் போது நெஞ்சம்
புதிய புதிய இன்பம் அடைந்து மகிழவே
மறந்து போகிறேன் என்னை நானே!

பிறந்த குழந்தையென
நம்மை நினைத்து
வந்து கலந்த மகிழ்
துள்ளி எழுந்து
ஆட்டம் போடுதே!

அருகில் வந்தவளே
அணைத்து பிணைத்தவளே
மனதில் நிறைந்து
நித்தம் பூத்து குலுங்குகின்ற
பூந்தோட்டமே!

வெள்ளை பனியினிலே
முல்லை மலரென
அழகை தெளித்து செல்லும் அருவியே!

உதடும் உதடும் இனி உண்மை ஆகிவிட
கண்கள் பேசும் மொழி
கவிதை ஆனதே!

ஆயுள் முழுவதும் நீ
அடர்ந்து படர்ந்து விட
நித்தம் மலர்ந்து
நினைவில் கலந்தவளே
நீயும் நானும்
பாலும் தேனும் ஆகிறோம்!

பெண்ணே எல்லாம்!

ஆணென்ற சொல்லில்
பெண்தானே எல்லாம்
அன்னையாய் உயிர் தந்து
மனைவியாய் உடல் தந்து
குழந்தையாய் மகிழ் தந்து
நெஞ்சம் நிறைகிறாள்... !
உயிரில் கறைகிறாள்...!

கெஞ்சி கெஞ்சி
பேசி பேசி
கொஞ்ச சொல்கிறாள்!
மிச்சம் வைத்து போகாத
முத்தம் தருகிறாள்!

மடி தூங்கவே
தலை கொய்கிறாள்!
காதோரமாய் கதை செல்கிறாள்!
நாள்தோறுமே
பிறக்க வைக்கிறாள்!
நான் தூங்கியும்
விழித்து ரசிக்கிறாள்!

பெண்ணென்ற அமிழ்தில்
மூழ்கடிக்கிறாள்!
கண்ணென்ற மொழியில்
பேசி பார்க்கிறாள்!

மகளாக வந்து
வம்பு செய்கிறாள்!
நித்தம் நித்தம்
குத்தி குத்தி
சண்டை செய்கிறாள்!

பொய்யாக நானும்
தோற்றாலும் போதும்
கண்ணீர் துளியில்
கறைய வைக்கிறாள்!

இன்பங்கள் எல்லாம்
பெண் தானே என்று
ஆணின் அகந்தை
கிழித்து எறிகிறாள்!

ஓகோ! பெண்ணே
நீ தானே இங்கு
ஆணின் பாதி!
இறைவனும் அதையே
சொல்லி சொல்லி
ஆர்பறிக்கிறான்!

யுத்தம் செய்கிறாய் பெண்ணே!

எனக்கே என்னை அறிமுகம் செய்திட
உந்தன் கண்களில்
எந்தன் பிம்பத்தை
மாட்டிவைக்கிறாய்!

காதல் தோன்றவே
கட்டிக்கொள்கிறாய்!
கனவு காட்சியை
ஒளிப்பதிவு செய்கிறாய்!

உதட்டு வியர்வைகள்
உலர்த்த வேண்டியே
மலரிதலினால் முத்தம்
பகிர்கிறாய்!

நெடுந்தூரமாய் கூட்டிப்போகிறாய்
குழந்தை போலவே
பேசி மகிழ்கிறாய்!

விரல்கள் கோர்த்து
கை வீசி பார்க்கிறாய்!
மலரை காட்டியே
அழகு என்கிறாய் - அது
உன்னில் தோற்றதை
உணர மறுக்கிறாய்!

ஊசி பார்வையால்
குத்தி கிழிக்கிறாய்!
பனிப்பூக்களை
அள்ளி தெளிக்கிறாய்!

நெத்தி பொட்டென
என்னை ஒட்டி கொள்கிறாய்!

நித்தம் நித்தமும்
வானவில்லாக
வண்ணம் மாறியே
வாஞ்சை செய்கிறாய்!

பெண்ணின் வாசத்தை
பூசி அணைக்கிறாய் - உன்
முகத்தின் அழகினால்
நிலவை போவென
துரத்தி அடிக்கிறாய்!

யாவும் நானென கத்தி சொல்கிறாய்!
ஆனபோதுமே ஒரு யுத்தம் செய்கிறாய் -ஆம்
அன்பை பொழிவதில்
யுத்தம் செய்து நீ
வெற்றி உனதென
ஆர்ப்பறிக்கிறாய்!

கார்த்திக் எனும் நண்பன்!

நான் என்று நீ என்று
இங்கு இல்லையே!
நாம் என்று ஆனபின்பு வரும்
பிரிவு தொல்லையே!

பூ ஒன்று பிரிந்துபோக வரும்
செடியின் சோகத்தை
சுமந்து இங்கே நிற்பதெல்லாம்
நாங்கள் அல்லவா!

நீ விட்டு போனபின்பும்
சுகங்கள் இருக்குமா? அது
சரக்கு இல்லா Bachelor Party போல
சோகம் அல்லவா!

பேரம் பேசி ஜெயிப்பதெல்லாம்
உந்தன் விந்தையே!
தட்டுத்தடுமாறினாலும் உனது பணி
செய்வதெல்லாம் வெற்றி எல்லையே!

கேலிப்பேச்சு பேசிப்பேசி
நொடிகளெல்லாம் தீர்ந்து போகுமே!
ஆனபோதும் அலுவலிலே
நீ காட்டும் மதிப்பு நீளுமே!

உன் துணிவு மட்டும்
தெரிந்ததெல்லாம் பெண்கள் அல்லவா!
நீ காதல் லீலைகள்
செய்வதெல்லாம் இங்கு சொல்லவா!?

எந்த பிழை செய்தபோதும்
தப்பிக்கொள்ளும் நடிகனாகிறாய்!
நாங்கள் மாட்டிக்கொள்ளும்
நாட்களெல்லாம் சிரிப்பை பொழிகிறாய்!

ஆட்டம் போட்டு நீச்சல் குளத்தில் நீந்த செல்கிறாய்!
கூட ரெண்டு Beer-u ஊத்தி
மூழ்கிக்கொள்கிறாய்!

கேலிகிண்டல் செய்து செய்து
சிரிக்க வைக்கிறாய்!
பெரும் பொய்கள் அவிழ்த்து விட்டும்
உண்மை என்கிறாய்!

இனி நீ விலகிப்போனபின்பு
இந்த நொடிகளெல்லாம் கரைந்து போகுமே!
வரும் நாட்களெல்லாம் குப்பை போல குவிந்து கிடக்குமே!

நட்பு என்ற சொல்லின் அர்த்தம்
நீதான் அல்லவா!
இனி அந்த சொல்லை தொலைத்துவிட்டு
நாங்கள் தேடிச்செல்வதா?!

சோக மேகம் சூழ்ந்துகொண்டு
கேலி செய்யுமே!
நீ விழகி போனதையே
விழிகள் தேடுமே!

நண்பனே!
ஒரு கண்ணீர்த்துளி
உனை எட்டிப்பார்க்குதே!
ஓடி வந்து அணைத்துக்கொள்ள
உன் கரங்கள் தேடுதே!

#கார்த்தி
#இளையபாரதி

நீ வாராயோ!

நீ யாரோ பெண்ணே!
எனக்காக உன்னை
இறைவன் படைத்தானோ?

எங்கெங்கோ உன்னை
தேடிய கண்ணை
கேளாமல் நானும்
மனமெங்கும்
காதல் நிரப்பி வைத்தேன்!

நீ வந்து இங்கே
மலர்காற்றாய் மெல்ல
வீசி செல்லாயோ?

பூந்தோட்டம் உள்ளே
உன்மேனி மெல்ல
செல்லும் போது
பூக்கள் கூட்டம்
வெட்கி நாணாதோ?

உன் ஸ்பரிசம் பட்டு
இளந்தென்றல் காற்று
இன்பங்கள் அடையதோ!

என் மண மேடை
உன் மணக்கோலம் கண்டு
நாம் வாழ்வில் இணைய
கெட்டிமேளம் இசைக்கின்ற நாளை
நான் செதுக்கி கொண்டிருக்கிறேன்...
நீ வாராயோ!

ஆன்மிக அரசியல் விமர்சனம்

ஆன்மிகம்-அரசியல்

எது ஆன்மிகம்...

உள்ளும் புறமும் மனத்தூய்மையும், சுய ஒழுக்கமும், புல், பூச்சி,பறவை, விலங்கு, மனிதம், மரம்,மலை, காடு என அனைத்தின் மீதும் அன்பும் பறிவும் கொண்டு,
ஒரு போதும் மனம் அறிந்து எந்த உயிர்க்கும் தீங்கிழைக்காது சாதி, மதம், இன வேறுபாடு இன்றி அவரவர்  வாழ்வியல், வழிபாட்டு உரிமையையும் ,உணவு முறையையும் மதித்தல்.

இயற்கை விதிகளுக்கு முரணான செய்கைகள் செய்யாது, அவ்வாறு செய்பவருக்கு நல்வழி கூறி நெறிப்படுத்துதல்.

இறைவன் திருப்பெயரால் ஈகை செய்து, வணிக நோக்கமின்றி கடவுள் வழிபாடு செய்தல்.

பணம்,குலம், நிறம் ஆகியவற்றின் பெயரால் ஏற்றதாழ்வுகளை உண்டாக்காமல் இறைவனை பூஜிக்கும் உரிமைகள் மறுக்காமல், வாழ்வதே ஆன்மீகம்.

அரசியல் என்பது,
எந்த வகையிலான ஏற்றத்தாழ்வுகளையும் புறக்கணித்து, அனைத்து உயிர்களுக்குமான வாழ்வியல் சமநிலையை உறுதி செய்வது.

அடிப்படை தேவைகளையும், கட்டமைப்புகளையும், கல்வி ,மருத்துவம் போன்றவற்றை சிறந்ததும், பொதுவானதுமாக
மக்களுக்கு ஏற்படுத்தி தறுதல்.

இயற்கை வளங்களை பாதுகாத்து, தேவைக்கேற்ப பயன்படுத்துதல்.

முறையான , நேர்மையான வரி பங்களிபின் மூலம், போக்குவரத்து, மின்சாரம், வேலை வாய்ப்புகளை தரும் தொழிற்சாலைகள் அமைத்தல்.

கவிதை என்றால்!

நித்தமும் நீந்திப்போகும்
அற்ப வாழ்வின் ஆசைத்துளிகளில்
மொத்தமாய் உயிர்கொள்கின்றன உணர்வுகள்...

அத்தனையும் புத்தியிலே புதைத்து வைத்தாளும்
பெரும் புயலென வெடித்துவிடும்
அதனால் வடித்துவிடுகிறோம் கவிதைகளாய்..

 நிச்சயம் புன்சிரிப்பையும்
பொங்கிவரும் மகிழ்வையும் மட்டுமே
தரும்... மறுவாசிப்பில்...

சுவையின் சொப்பண முத்துக்கள் தான் கவிதை!

ரசிக்கத்தெரிந்தவற்கு
மட்டுமே கவிதை உணர்வோவியம்
மற்றோற்கு அது
எழுத்துக்களின் எண்ணிக்கை மட்டுமே

#இளையபாரதி

நாதியத்த சனம்!

நாடாண்ட சனமடா...
நாதியத்து கிடக்குது...
யார் யாரோ வந்து இங்கு
ஆள ஆசை துடிக்குது..
அப்பனும் ஆத்தாலும்
ஏமாந்து போனாங்க..

சாதி, மதமுன்னு பிரிச்சு வச்சு
சண்டையத்தான் வளர்த்து வச்சு
சதிகார கூட்டமொன்னு
அதிகாரம் பண்ணிடுச்சு...

அண்ணன் தம்பி உறவுளையும் அரசியல் கலந்துடுச்சு...
தண்ணிக்கும், காத்துக்கும்
காசுதற போறோமே

மண்ணையும் மலடாக்கி
விவசாயம் சாகுதடா...
மீதேனு வந்து இங்க
காவு வாங்க பாக்குதடா...

கத்தி கத்தி செத்தாலும்
அரசாங்கம் கண்டுக்கல்லை...
காச தந்து ஓட்டு வாங்கி
நாட்டை விக்க போராய்ங்க...!

அன்பு சிறை!

காதல் மெல்ல மெல்ல
காற்றில் கலந்து வந்து
இதய கூட்டுக்குள்ளே
இறகை விரித்து வைத்து
பட்டாம்பூச்சி போல
பறந்து திரிகிறதே!

மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பனியை
இறக்கி வைத்து
குளிரில் குழந்தை போல நடுங்க வைக்கிறதே!

உன்னை மட்டுமே காதல் செய்ய சொல்லி
அன்பு சிறையில் அடைத்து வைத்து என்னை நித்தம் நித்தம்அடை காக்கிறாய்!

இதயதுடிப்பினையே
இனிய ராகமாக்கி
காதல் படல்களை
கண்கள் கொண்டு நீயும் எழுதுகிறாய்!