Translate

Sunday, 22 July 2018

பேரன்பு எனும் திரைப்படம்

பேரன்பே!
பெருமழையே...!
நீ இங்கே பொழிவதினால்
உயிர்வலியும் தெரிவதில்லை!

உறவுகளில் நீ இருக்க
உரிமைகளில் குறையுமில்லை!
உடலதுவில் குறையென்று
படைத்திட்ட இறவனிடமும்
பகை என்று ஏதுமில்லை
பேரன்பே நீ இருக்க!

மனதினில் மகிழ்தனை
பிறப்பிக்கும் உயிராக
மகள் இங்கு பிறந்திருக்க
இதழ்தனில் பெருவெள்ளம்
இன்பமாக சிரிக்கிறதே!

ஒரு போதும் உனையன்றி
என் ஜீவன் வாழ்ந்திடுமோ!?
உயிராக நீ இருக்க
இறப்பென்றும் வந்திடுமோ!?

மடிதனில் உறங்கி
இரவுகளை வென்றிடும்
இனிமைகள் நீ தர
ஒரு போதும் இதயத்தில்
வலி என்று தோன்றிடுமோ!?

கண் எதிரே நீ இருக்க...
கனவுகளில் தேவதையை
காண்கின்ற மூடனில்லை-நான்!

பேரன்பே...!
நீ பொழிவாய்...
பெருமழையாய் என்றென்றும்...
நீ பொழிவாய்...
பேரன்பே...!

No comments:

Post a Comment