வண்ணப்பூக்கள்
வாசம் சூழ்ந்த மணவிழா மேடையில்
மணமக்களாய்
நாங்கள் காத்திருக்க...
எண்ணப்பூக்கள்
அலங்காரமாய்...
இன்பம் இதுவென
மகிழ்வெள்ளம் பாய்ச்சும்
நட்பு மனங்களே
வந்து வாழ்த்துங்கள்!
எங்கும் நிறைந்த
உறவுகளின் சங்கமத்தில்
சந்திரனாய்
ஒளிவீச
நெஞ்சம் நிறைந்த
நண்பர் கூட்டமே வாருங்கள்!
அன்பு நண்பனின்
ஆசை முழுவதும்
உங்கள் வருகைதானென
காத்திருக்கிறேன் வாருங்கள்!
உங்கள் விழாவென
சொல்லத்தேவை இல்லை!
உரிமை கொண்டே வாருங்கள்!
எங்கள் இதயங்கள் இணையும்
திருமணவிழா சிறக்க
அன்பு நெஞ்சங்களே
பாச மலர் கொண்டே வாருங்கள்!
வாசம் சூழ்ந்த மணவிழா மேடையில்
மணமக்களாய்
நாங்கள் காத்திருக்க...
எண்ணப்பூக்கள்
அலங்காரமாய்...
இன்பம் இதுவென
மகிழ்வெள்ளம் பாய்ச்சும்
நட்பு மனங்களே
வந்து வாழ்த்துங்கள்!
எங்கும் நிறைந்த
உறவுகளின் சங்கமத்தில்
சந்திரனாய்
ஒளிவீச
நெஞ்சம் நிறைந்த
நண்பர் கூட்டமே வாருங்கள்!
அன்பு நண்பனின்
ஆசை முழுவதும்
உங்கள் வருகைதானென
காத்திருக்கிறேன் வாருங்கள்!
உங்கள் விழாவென
சொல்லத்தேவை இல்லை!
உரிமை கொண்டே வாருங்கள்!
எங்கள் இதயங்கள் இணையும்
திருமணவிழா சிறக்க
அன்பு நெஞ்சங்களே
பாச மலர் கொண்டே வாருங்கள்!
No comments:
Post a Comment