Translate

Friday, 20 July 2018

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மகிழ் எனும் பெருவெள்ளம்
மனம் நிறைக்க வந்தவள்!

மகவென்னும் அருஞ்சொல்லின்
பொருள் சொல்ல
பிறந்தவள்!

சிரித்திட்ட மலர்முகம் கொண்டு
மழலை மொழி வாசம் செய்து
உணர்விலே பேரன்பை
உயிர்ப்பிக்க செய்தவள்!

தவழும் தடாகம் ஒன்று
வீட்டிலே உலாவும்
உன்னதம் காண செய்தவள்!

ஆனந்த பெருமொழியாய்
அன்னை மடி நிறைந்த
அற்புத திருநாளாம்
இனிய பிறந்தநாளில்

நற்கல்வியும்,
நயம் நிறை பேச்சும்,
நிலையான பேரழகும்,
நிறைந்த பெரும்செல்வமும்,

குன்றா புகழும்,
குறைவில்லா இன்பமும்,
நல் ஆரோக்கியமும்,
நீண்ட ஆயுளும் பெற்று

அகமகிழ் ஆனந்த புதல்வியாய் வாழ
மனம் நிறைந்த

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment