Translate

Saturday, 21 July 2018

ஈழ நிலம்

யாதென்று ஞான் ஏது சொல்வேன்?
தீதென்று தெரிந்தும் துணிந்து செய்த
சூது வளர்த்த சாத்தான் பிள்ளைகள்
கருணாக்கள் காட்டிக்கொடுக்க
வீழ்ந்து மடிந்த வீரத்தின் பிள்ளைகள்
தியாகம் இதுவென சொல்வேன்!

நெஞ்சில் பாயும் தோட்டாக்கள்
தோரணங்களாய் மாறிப்போக
மறித்து போன எம் வீரர் கூட்டம்
வீழ்ந்ததே பன்னாட்டு சூழ்ச்சியால்!

பெண் பிள்ளை என்றோ,
பச்சைப்பாலகன் என்றோ
போர்மரபு காணா
குருடர் கூட்டம்
குதறித்தள்ளிய உயிர்கள்
பட்ட பாட்டை என்ன சொல்வேன்!?

உதிரம் சதையோடு ஊறிப்போன மண்
உரமென ஏற்றுக்கொண்டதே
பெருமறவர் தியாக உடல்களை!

விதை என்றே விழுந்த இனம்
எழுந்து வருமே! திமிறி
எழுந்து வருமே!

#வீரவணக்கம்

No comments:

Post a Comment