Translate

Friday, 20 July 2018

சுதந்திரம்

சுதந்திரம்

வீசும் காற்றென
வரவி இருந்திட வேண்டும்...

பேசும் மொழியினில்,
பார்க்கும் பார்வையில்
கண்ணியம் காத்திட வேண்டும்!

உயிருக்கு நிகறென
பெண்ணியம் போற்றிடல் வேண்டும்!

ஆணுக்கு நிகரென
பெண்ணுக்கும்
உரிமைகள் வந்திடல் வேண்டும்!

பெண் பேசிடும் ஆணெல்லாம் காதலன் என்றென்னும்
கருத்து மறைந்திடல் வேண்டும்...

அழகென்ற பெருமை சொல்லி
பெண்ணை காட்சி பொருளாக்கும்
கயமை மறைந்திடல் வேண்டும்!

குடிக்கும் மதுவினில் சரிபங்கு தான்வேண்டும்
எனும் போலி சுதந்திரம்
மறைந்திட வேண்டும்...

ஆணென்ன பெண்ணென்ன
தவறென்ற செயலினிலே
யாவும் குறைந்திடல் வேண்டும்...

ஆணென்ற பலமெல்லம்
அதிகாரம் செலுத்திடத்தான்
எண்றென்னும்
போதை குறைந்திடல் வேண்டும்...

No comments:

Post a Comment