Translate

Friday, 20 July 2018

நிலா!

நீல வானம்
மெல்ல பூக்கும் வெள்ளைப்பூவது!
வரும் இரவுயாவும் வந்து நிற்கும்
வெள்ளி மலரது!

பிள்ளைபோல அள்ளிகொஞ்சும்
ஆசை மனமெல்லாம்
எண்ணி எண்ணி
இன்பம் கொள்ளும்
வண்ணதேன்நிலா...

வானமெங்கும் விரவி நிற்கும் விண்மீன் தோட்டத்தில்
வாலிபத்து காதல் சொல்லும்
ஆசை பூ நிலா!

தாயின் பாச
அன்னம் திண்ணும்
மழலையாக மயங்க செய்யும் பிள்ளைநிலா!

அந்திவானம் சிவந்தபோது இருளைக்கிழித்து
எழுந்து வரும்
செந்நிலா!

பள்ளி செல்லும் பிள்ளை யாவும்
சொல்லி மகிழும்
நிலா...நிலா... ஓடிவா!
நீலகடலில் நீந்தி வா நிலா!

கொஞ்சம் கொஞ்சம் தேய்ந்து தேய்ந்து
கண்ணாமூச்சி ஆடவரும்
அமாவாசை கருப்புநிலா!

காதல் கவிகள்
காற்று வானில்
சிறகடிக்க
கற்பனைதேர் ஏறிவரும்
கன்னி பெண் நிலா!

No comments:

Post a Comment