Translate

Friday, 20 July 2018

வாட தோழா என்னோடு- நீ
வந்து நின்று தோள் கொடு!
வாழ்க்கை இங்கே போராட்டம் - நீ
சேர்ந்து நின்றால் கொண்டாட்டம்!

புரட்சி என்று குரல் கொடு!
வரும் எழுட்சி கண்டு புறப்படு!
நீயும் நானும் ஒன்றானால் - இனி
எதிரி கூட்டம் திண்டாடும்!

உழைத்து கழைத்து இங்கே நாம்
அடங்கி ஒடுங்கி போகிறோம்!
கேடுகெட்ட அரசுகள் - நம்
உழைப்பின் இரத்தம் குடிக்கவே
துடித்து துடித்து சாகிறோம்!

இரத்தக்கறை ஆடையில்
தேசபக்தி மேடையில்
'வந்தே மாதரம்' என்றுதான்
வெற்று முழக்கம் தேவையா?

இரத்தம் எடுக்கும் கொடியவன்- போடும்
உயிரை உறிஞ்சும் 'வரி'களால்
மறித்து போக போகிறோம்!

கல்வி, மருத்துவ சேவையும்
உணவு தண்ணீர் தேவையும்
தனியார் மயம் ஆனதே!
'சாலை' போட்ட வரியென 'அவனும்' மறித்துப் பறிக்கவே
பதறி சிதறி போகிறோம்!

அனுஉலையும் OIL-உம்
மீத்தேன்  ஹைட்ரோ கார்பனும்
அரிசி சோற்றுக்கு மாற்றென
கூவி நிற்கும் அரசாங்கம்...
கேள்வி கேட்ட(டா) மக்களை சாகடிக்கும் அரசாங்கம்!

நேத்து செத்த உயிருக்கு(ஈழத்தமிழர்)
மெழுகுவர்த்தி ஏந்திட
 நாளை சாகபோகிறோம் - என
துண்டு சீட்டும் கொடுத்திட
குண்டர் சட்டம் பாய்ந்தது!
குரல் வளையும் நெறிந்தது!

 அடிமை ஆட்சி அரசனாம் - இவன்
இரத்தக்காட்டேரி புருசனாம்!
மாடு பேர சொல்லியே
மனித இரத்தம் அள்ளியே
காவி பக்தன் வருகிறான்
காலு ஊன்ற பார்க்கிறான்!
விரைந்து வாடா நண்பனே
காக்க வேண்டும் நம்மையே!

இருந்து விட்டால் வீட்டிலே
இறந்து விடுவோம் நாட்டிலே! வெறும்
போராட்டங்கள் போதுமா? - இல்லை
புரட்சித்'தீ'யே வேண்டுமா?

கத்தி சொல்வோம் உலகுக்கு
களம் இறங்கி வந்திடு!
பெருங்கர்ஜனையும் செய்திடு!

No comments:

Post a Comment