அருள்நிறை ஆதவன் பெரு ஒளியில்
மகிழ்நிறை மனங்களின் இணைப்பு விழா!
இறையருள் பெற்ற
இருகரங்கள் இணையும் இனியவிழா!
சுற்றமும் நட்பும் பெருந்திரளாய்
கூடித்திளைக்கும்
புனித விழா!
ஆன்றோர் சான்றோர்
பெரு அவையில்
கற்ற பெரியோர் வாழ்த்தும் விழா!
சொந்த பந்தங்கள்
வாழ்த்து இசைக்க
காதல் கண்மணிகள்
காணும் விழா!
இல்லறம் சேரும் இளைய நிலா...
இறைவன் அருளால் கனிந்த பலா!
எந்நாளும் இங்கே
இன்பத்தின் இனிய உலா!
திக்கெட்டும் தேவர்கள்
சூழ்ந்திருக்க...
மங்கள வாத்தியம்
முரசொலிக்க...
இது திருமண திருவிழா!
மகிழ்நிறை மனங்களின் இணைப்பு விழா!
இறையருள் பெற்ற
இருகரங்கள் இணையும் இனியவிழா!
சுற்றமும் நட்பும் பெருந்திரளாய்
கூடித்திளைக்கும்
புனித விழா!
ஆன்றோர் சான்றோர்
பெரு அவையில்
கற்ற பெரியோர் வாழ்த்தும் விழா!
சொந்த பந்தங்கள்
வாழ்த்து இசைக்க
காதல் கண்மணிகள்
காணும் விழா!
இல்லறம் சேரும் இளைய நிலா...
இறைவன் அருளால் கனிந்த பலா!
எந்நாளும் இங்கே
இன்பத்தின் இனிய உலா!
திக்கெட்டும் தேவர்கள்
சூழ்ந்திருக்க...
மங்கள வாத்தியம்
முரசொலிக்க...
இது திருமண திருவிழா!
No comments:
Post a Comment