Translate

Saturday, 21 September 2019

நீ மழையாய் பொழிந்தால் - கவிதை

நீ மழையாய் பொழிந்தால்
நான் மரமாய் நனைவேன்!
நீ புல்லாய் முளைத்தால்
நான் பனியாய் அமர்வேன்!

விழுதென விழுந்துமே
உன்னை நான் தாங்குவேன்
அகிலென இருந்தே தான்
உன் வாசமாய் வாழுவேன்!

உன் சிரிப்பு போதும்
என் ஜென்மங்கள் நீளும்!
உன் கண்கள் போதும்
என் பார்வை பரவும்!

முத்தங்கள் போதுமென்று
பொய்களை நான் சொல்வேன்
நித்தமும் உணர்ந்து நீயும்
மொத்தமாய் தான் தருவாய்!

அன்னையை போலென்னை
அணைக்கும் பேரன்பு நீ!
குழந்தையாய் உனைத்தாங்கும்
மற்றோரு தகப்பன் நான்!

#அவள்

No comments:

Post a Comment