பறந்தவானம்
திறந்துகிடக்கு !
பிறந்த
பூமி விரிஞ்சுகிடக்கு !
வரிஞ்சு
கட்டி வாடா
வாழ்க்கையில்
தோதா
ஜெயிச்சிடலாம்
நண்பா !
வெற்றிபெற கிளம்பிடு !
வீண்பேச்சு
குறைச்சுடு !
ஊர்பேச்சு
எல்லாமே
உன்பேச்சு
என்றாகும்
ஒருநாளை
நீ காண உழைத்திடு !
நண்பா உழைத்திடு
!
நன்றான
வாழ்க்கையிலே
ஒன்றான
மனுசங்களா நாமிருப்போம்!
நண்பா நாமிருப்போம்!
பச்சமரம்
செடிகொடிதான்
பரந்தநிலம்
பரப்பிடுவோம்!
சிறுஎறும்பு
ஒன்று முதல்
ஒவ்வொரு
உயிரிடமும்
உன்னத
அன்பை வைத்து – நாம்
உருவாக்கிக்காட்டிடுவோம்
!
உயர்ந்த
சமூகத்தை நாமும்
உருவாக்கிக்காட்டிடுவோம்
!
No comments:
Post a Comment