காற்றை கடந்து போ
நதியில் நடந்து போ!
முள்ளாய்க்குத்தும் உலகிற்கு
உன் முகத்தை ஒருமுறை
காட்டிவிடு!
மலராய் கிடக்க -
உன்பாதையில்
நீ மன்னன் இல்லை
உணர்ந்துவிடு!
மகுடம் சூட எண்ணினால்
மரணம் பலமுறை
கடந்துவிடு!
வார்த்தை தூற்றும்
உலகோடு
வம்புகள் செய்ய
மறந்திடு!
தீயை மிதித்து
பார்த்திடு!
அதன் காயம் ஒருமுறை
வாங்கிடு!
சாயம் பூசா முகத்தோடு
சரித்திரம் படைக்க
முனைந்திடு!
முன்னாள் நிற்கும்
உலகம்
உனக்காய் மாறும் ஒருநாள்!!!
அந்நாள் காண போராடு!
வரிகள் மிகவும் கோர்வையாக உள்ளது ஹரி....!
ReplyDelete