Translate

Monday, 28 January 2013

பயிர் வாடியதற்காய்
உயிர் வாடிய தமிழா!
உரத்தில் கொள்ளை என்பதற்காய்
உன்னையே உரமாக்கிக்கொண்டாயோ ?
நீர் மறுத்த துரோகிகள்
வாழும் போது,
நீ ஏன் சென்றாய்!

எம் கண்ணீரெல்லாம்
வயல் நிரம்பி செல்கிறதே!!
யார் சொல்வார்
உன் துயர் பற்றி!

பற்றி எரியும் நெஞ்சங்கள்
வேதனையில் வாடுவது அறிவாயோ?
இங்கே அரசர் கூட்டம்
அறம் மறந்ததுதான் அறிவாயோ?

No comments:

Post a Comment